மீன ராசியில் சந்திக்கும் 3 ராசிகள். மார்ச் 15க்கு பிறகு கட்டாயம் இது நடக்குமாம்

By Sakthi Raj Mar 10, 2026 01:00 PM GMT
Report

கிரகங்களில் தலைமை கிரகமாக விளங்கக்கூடிய சூரிய பகவான் ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பின் பொழுதும் அவருடைய இடத்தை மாற்றுகிறார். அவர் தற்பொழுது கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். அவர் மார்ச் 15ற்கு பிறகு குரு பகவானின் சொந்த வீடான மீன ராசியில் நுழைகிறார்.

மீன ராசியில் ஏற்கனவே சனி மற்றும் சுக்கிர பகவான் இருக்கிறார்கள். அவர்களுடன் சூரிய பகவானின் சேரும் பொழுது திரி கிரக யோகமும் சுக்கிரன் மற்றும் சூரியன் இணைவதால் சுக்ராதித்ய யோகமும் உருவாக இருக்கிறது. இதனால் எந்த ராசிகளுக்கு நன்மை கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம்.

மீன ராசியில் சந்திக்கும் 3 ராசிகள். மார்ச் 15க்கு பிறகு கட்டாயம் இது நடக்குமாம் | March 15 Suriyan Peyarchi Astrology Prediction

கடவுளுக்கு பிடித்த பக்தனை மனிதர்களுக்கு பிடிப்பது இல்லை.. காரணம் தெரியுமா?

கடவுளுக்கு பிடித்த பக்தனை மனிதர்களுக்கு பிடிப்பது இல்லை.. காரணம் தெரியுமா?

ரிஷபம்:

ரிஷப ராசிக்கு இந்த காலகட்டத்தில் சகோதரர்கள் உடைய முழு ஆதரவும் கிடைக்கும். நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த சொத்து விவகாரம் ஒரு நல்ல முடிவை பெரும். புதிய தொழில் தொடங்குவதை பற்றி யோசிப்பவர்களுக்கு பொன்னான காலமாகும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகளும் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கக்கூடிய நட்புகளும் பெறுவீர்கள்.

மிதுனம்:

மிதுன ராசிக்கு இந்த காலகட்டம் மிகப்பெரிய அளவில் நன்மை வந்து சேர போகிறது. தொழில் ரீதியாக நல்ல லாபத்தை பெறப்போகிறார்கள். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் நடக்கப்போகிறது. மனரீதியாக தெளிவு பிறக்கும். பொன் பொருள் சேர்க்கை மற்றும் வசதி வாய்ப்புகள் உண்டாகும். எதிரிகளை வெல்லக்கூடிய ஆற்றல் பெறுவீர்கள். வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியான நேரம் செலவழிப்பீர்கள்.

இந்த ஒரு விஷயம் தெரிந்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்.. என்ன தெரியுமா?

இந்த ஒரு விஷயம் தெரிந்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்.. என்ன தெரியுமா?

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டமானது இவர்களுக்கு கடன் தொல்லையிலிருந்து விடுபடக்கூடிய அற்புதமான அமைப்பு உருவாகப் போகிறது. திடீர் அதிர்ஷ்டமும் வேலையில் புதிய வாய்ப்புகளும் தேடி வர போகிறது. தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடையப் போகிறீர்கள். நிலம் வீடு வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும்.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US