நாளை மறந்தும் சிவபெருமானுக்குரிய இந்த வழிபாட்டை தவறவிடாதீர்கள்
மார்கழி மாதம் ஒவ்வொரு நாளும் வழிபாட்டிற்கு உரிய சிறந்த மாதம் ஆகும்.அந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்புக்கள் கொண்டு நம்மை பக்தியில் திளைத்துவிடும்.அப்படியாக நாளை மார்கழி மாதம் 27ஆம் தேதி சிவனுக்கு உகந்த சனி மகா பிரதோஷம் ஆகும்.
சிவ பக்தர்கள் சிவன் என்றாலே மனதை கொடுத்து விடுவார்கள்.அந்த வகையில் நாளை வரும் சனி மகா பிரதோஷம் அன்று சிவபெருமானை எவ்வாறு வழிபாடு செய்து அவரின் அருளை பெறலாம் என்று பார்ப்போம்.
பொதுவாக இறைவனை எந்த நேரத்திலும் வழிபாடு செய்யலாம் என்றாலும் அவர்களுக்குரிய சிறப்பான நாளில் நம்முடைய வழிபாடு செய்வது கூடுதல் பலன்களை கொடுக்கும். நாம் அனைவரும் அறிந்திருப்போம் சிவபெருமான் ஒரு அபிஷேக பிரியர் என்று.
ஆதலால் நாளை மனதிற்கு பிடித்த சிவபெருமான் ஆலயம் சென்று,உங்களால் முடிந்த அளவு அபிஷேகத்திற்கு உங்களுடைய பங்களிப்பை கொடுங்கள்.அதிலும் முக்கியமாக இந்த மூன்று பொருட்களை கொடுத்து வழிபடுவது நல்ல பலன் கொடுக்கும்.
அதில் முதலில் நந்தி தேவருக்கு நார்த்தங்காய் வாங்கி கொடுத்து, அபிஷேகம் செய்தால் நம்முடைய மனக்கஷ்டம் முற்றிலுமாக குறையும்.சொந்த வீடு,நிலத்தில் உண்டான பிரச்சனைகள் படிப்படியாக விலகும்.
பிறகு எம்பெருமான் ஈசனுக்கு வெண்தாமரைப் பூவை வாங்கி கொடுத்து வழிபாடு செய்தால்,நமக்கு ஏற்பட்ட பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் தீரும். கடன் சுமை குறையும் என்று சொல்லப்படுகிறது.
வெண்தாமரை கிடைப்பது அரிது என்பவர்கள் செந்தாமரை வாங்கி கொடுக்கலாம். எம்பெருமானை குளிர வைக்கும் மிக முக்கியமான பொருள் இளநீர்.இந்த இளநீர் அபிஷேகம் மிக மிக சிறந்தது.
இந்த அபிஷேகம் செய்ய குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் மனமகிழ்ச்சியோடு இருப்பார்கள். பிள்ளைகள் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
ஆக நாளை மறக்காமல் குடும்பமாக சிவன் ஆலயம் சென்று வழிபாடு செய்யுங்கள்.உங்கள் வாழ்க்கை மேம்படும்.ஈசனின் கடைக்கண் பார்வையும் நம் மீது விழும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |