இன்றைய ராசி பலன்(23.12.2024)
மேஷம்:
பழைய பிரச்சனைகள் மீண்டும் தொடரலாம்.கவனமாக இருப்பது அவசியம்.நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.காலையில் இருந்து மிகவும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள்.செல்வாக்கு உயரும்.
ரிஷபம்:
உறவினர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடவேண்டாம்.அது மிக பெரிய முறிவை ஏற்படுத்தும்.அடுத்தவர்களின் பலம் பலவீனம் அறிந்து செயல்படுவது வெற்றியை தரும்.உங்கள் திறமை வெளிப்படும்.
மிதுனம்:
இன்று தாய் வழியில் உங்களுக்கு பலரும் ஆதரவாக இருப்பார்கள்.நினைத்ததை முடித்துக்காட்டும் நாள்.அரசு அதிகாரிகள் வேலையில் சற்று கவனமாக இருக்கவேண்டும்.பயணங்களில் நிதானம் அவசியம்.
கடகம்:
சிந்தித்து செயல்படுவதால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். நினைத்த வேலையை முடிப்பதில் உறுதியாக இருப்பீர்கள்.செயல் வெற்றியாகும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.
சிம்மம்:
வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள்.உங்களுக்கான மதிப்பு அதிகரிக்கும்.மனதில் தைரியமும் உற்சாகமும் அதிகரிக்கும்.ஆதாயமான நாள்.
கன்னி:
கன்னி ராசிக்குள் சந்திரனும் கேதுவும் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு செயலிலும் நிதானம் தேவை.எதையும் துணிச்சலாக போராடி வெற்றி பெறுவீர்கள்.உங்கள் மன கவலைகள் தீரும்.
துலாம்:
இன்று தேவை இல்லாத அலைச்சல் மேற்கொள்வீர்கள்.திட்டமிட்டு செயல்படுவதால் உங்களுக்கான வெற்றியை அடைவீர்கள்.வாழ்க்கை துணையிடம் ஏற்பட்ட பிரச்சனை உங்களை விட்டு விலகும்.
விருச்சிகம்:
உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர் அலுவலகத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். பழைய பிரச்னை முடிவிற்கு வரும்.இழுபறியாக இருந்த வேலை எளிதாக முடியும். நண்பர்கள் உதவியால் உங்கள் முயற்சி வெற்றியாகும்.
தனுசு:
மூன்றாமிட சனியால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் சந்திப்பீர்கள்.பண நெருக்கடிகள் விலகும்.வாங்கிய கடனை அடைக்கும் யோகம் உண்டாகும்.ஜென்ம சூரியன் உங்களை வேகப்படுத்துவார். லாபத்தை அதிகரிப்பார்.
மகரம்:
தொழிலில் அக்கறை அதிகரிக்கும்.நேற்று இழுபறியாக இருந்த விவகாரம் இன்று முடிவிற்கு வரும்.எந்த வேலையாக இருந்தாலும் அதை யோசித்து செய்வது நல்லது.இழுபறியான வேலை முடியும்.
கும்பம்:
வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். இயந்திரப் பணிகளில் இருப்பவர்கள் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது.பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும்.
மீனம்:
வேலையில் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.விலகி சென்ற சொந்தங்கள் உங்களை தேடி வரும்.உங்களின் நீண்ட நாள் விருப்பம் நிறைவேறும்.இறைவழிபாடு கைகொடுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |