பலரும் அறிந்திடாத அதிர்ஷ்ட செடி-வீட்டில் எந்த திசையில் வைக்கலாம்?
வாழ்க்கையில் பணம் என்பது அவசியமான ஒன்று.அந்த பணத்தை சம்பாதிக்க மனிதர்கள் பல போராட்டங்கள் சந்திக்க உள்ளது.இன்னும் சிலருக்கு சம்பாதிக்கின்ற பணம் கையில் தங்குவதில்லை.
தொடர்ந்து ஏதேனும் வீண் செலவுகள் ஏற்பட்டு கொண்டு இருக்கும்.அப்படியாக வீட்டில் ஏற்படும் பிரச்சனைகள் விலக நாம் வாஸ்து செடிகள் அல்லது வாஸ்து சம்பந்தமான பொருட்கள் வாங்கி வைப்பது உண்டு.அந்த வகையில் எல்லோருடைய வீட்டிலும் கட்டாயம் வாஸ்து செடியாக மணி பிளான்ட், துளசி, கற்றாழை இருக்கும்.
இந்த செடிகள் வீட்டில் வைப்பதால் வீட்டில் உள்ள நேர்மறை ஆற்றல் பெருகும்.இந்த வகையில் பலரும் அறிந்திடாத அதிர்ஷ்ட செடி ஒன்று இருக்கிறது.அது தான் ஜேட் செடி. இந்த செடியின் இலைகள் பார்ப்பதற்கு வட்டமாக பளபளப்பாக, கண்ணுக்கு குளிர்ச்சியாக காணப்படுவதோடு மட்டும் அல்லாமல் வீட்டில் அதிர்ஷடம் உண்டாகி பணம் கஷ்டம் ஏற்படாமல் இருக்கும்.
அதனால் இந்த செடியை பண மரம் என்றும் குபேர செடி,லக்கி செடி என்றும் அழைப்பார்கள். மேலும்,இந்த ஜேட் செடிகளுக்குள் உள்ள சிறிய துளைகள், இரவு நேரங்களில் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுகிறது.இதனால், காற்றை சுத்தம் செய்யும் திறனை உள்ளடக்கி, காற்றின் தரத்தையும் மேம்படுத்துகிறது.
அதனால்தான் நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தை தரக்கூடிய இந்த செடியை படுக்கை அறையில் வைத்திருப்பார்கள். இந்த ஜேட் செடி பல வகையில் உள்ளது.ஜேட், நீலப் பறவை ஜேட் எனப்படும் ப்ளூ பேர்ட், கோல்லம் ஜேட், வெள்ளி டாலர் ஜேட், துறைமுக விளக்குகள், லேடி ஃபிங்கர்ஸ் ஜேட், ஹாபிட், பிங்க் ஜேட் போன்ற 8 வகையான ஜேட் தாவரங்கள் உலகளவில் பிரபலமானவையாகும்.
இந்த செடி வாஸ்து செடி என்பதால் இந்த செடியை வைக்கும் உரிய திசையில் வைக்கவேண்டும்.அந்த வகையில் இந்த செடியை வீட்டின் வடக்கு திசையில் அல்லது தென்மேற்கு திசையில் நடுவதால் சிறந்த பலனை பெறலாம்.
மேலும் நம் வீட்டில் உண்டான வறுமை படி படியாக குறையும்.ஆனால் ஒரு பொழுதும் இந்த செடியை இருட்டு சூழ்ந்த இடத்தில் வைக்கக்கூடாது.சூரிய ஒளி கட்டாயம் அந்த செடி மீது விழுவது போல் வைப்பது அவசியம்.
மேலும்,இந்த செடியை வீட்டில் நுழையும் பொழுது வலது பக்கத்தில் இருக்கும்படி வைப்பது மிகவும் நல்லது என்பார்கள்.ஆனால் ஒரு போதும் இந்த செடியை தெற்கு திசையில் வைக்க கூடாது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |