ஆண்டாளின் அருள் கிடைக்க மார்கழி வெள்ளி கிழமை இப்படி வாசல் தெளியுங்கள்

By Sakthi Raj Dec 18, 2024 12:14 PM GMT
Report

பிற மாதங்கள் காட்டிலும் பெண்கள் மார்கழி மாதத்தை மிகவும் விரும்புவார்கள்.அப்படியாக மார்கழி மாதம் காலை பனியிலும் பெண்கள் அதிகாலையில் தவறாமல் எழுந்து வாசல் தெளித்து வண்ண நிறங்கள் கொண்டு கோலம் போட்டு வீட்டை அலங்கரிப்பார்கள்.

மேலும் வாசலில் சாணம் தெளித்து கோலம் போடுவது மிக சிறந்த பலனை கொடுக்கும்.ஆனால் எல்லோராலும் மாட்டு சாணம் கொண்டு வந்து வாசல் தெளித்து கோலம் போடமுடியுமா என்று கேட்டால் வாய்ப்புகள் குறைவுதான்.

ஆண்டாளின் அருள் கிடைக்க மார்கழி வெள்ளி கிழமை இப்படி வாசல் தெளியுங்கள் | Margazhi Month Devotional Tips

அப்படியாக சாணம் தெளித்து கோலம் போட முடியாதவர்கள் வீட்டில் என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். இந்த பொருளை செய்வதற்கு மிக்ஸியில் மஞ்சள் கிழங்கு 2, ஏலக்காய் 10, பச்சை கற்பூரம் 2 துண்டு, கிராம்பு 10,என்று எல்லாம் போட்டு அரைத்து கொள்ள வேண்டும்.

குரு வக்கிர பெயர்ச்சி 2025:அதிர்ஷ்ட காற்று எந்த ராசிகளுக்கு?

குரு வக்கிர பெயர்ச்சி 2025:அதிர்ஷ்ட காற்று எந்த ராசிகளுக்கு?

 

பிறகு வாலி தண்ணீரில்,கொஞ்சம் அரைத்த பொடியையும் கல் உப்பும் சேர்த்து வெட்ட வெளியான இடத்தில் வைத்து விடவேண்டும்.பிறகு மறுநாள் அதை எடுத்து வாசல் தெளிக்க வீட்டில் லட்சுமி கடாச்சம் உருவாகும்.

அதாவது சாணம் தெளித்தால் என்ன பலன் கிடைக்குமோ அந்த அளவிற்கு ஒரு அற்புத பலனை இந்த தண்ணீர் கொண்டு தெளிப்பதால் நம்மால் பெற முடியும்.இவ்வாறு மார்கழி 30 நாளும் வாசல் தெளித்து கோலம் போட்டு வர வீட்டில் உண்டான கஷ்டம் படிப்படியாக குறைந்து சந்தோசம் நிலவுவதை காணமுடியும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US