மார்கழி செவ்வாய்க்கிழமை இதை செய்தால் முருகப்பெருமானின் பரிபூர்ண அருள் பெறலாம்
கலியுக வரதன் முருகப்பெருமான் பலர் வாழ்வில் நம்பிக்கையாக இருந்து வருகிறார்.முருகப்பெருமானை நொடி பொழுதும் மறவாமல் நினைத்து வழிபாடு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம்.பொதுவாக முருகப்பெருமான் வழிபாட்டிற்குரிய முக்கிய நாளாக செவ்வாய் கிழமை இருக்கிறது.
அன்றைய தினத்தில் விரதம் இருந்து முருகன் ஆலயம்சென்று வழிபாடு செய்தால் நாம் நினைத்த காரியம் நடக்கும் என்று காலம்காலமாக நம்பப்படும் ஒன்றாகும்.நாம் இப்பொழுது தமிழ் மாதங்களில் மார்கழியில் இருக்கின்றோம்.
இந்த மார்கழி மாதமானது அனைத்து கடவுள் வழிபாட்டிற்கும் உகந்த மாதம் ஆகும்.மேலும் இதை இறைவழிபாடு மட்டுமே செய்யக்கூடிய அற்புதம் மாதம் என்றே சொல்லலாம்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் வரும் செவ்வாய் கிழமை அன்று முருகப்பெருமானுடடைய பாடல்கள் பாடி வழிபாடு செய்ய நிச்சயம் அதற்கான பலனை பெற முடியும்.
அதில் முருகனுக்காக அருணகிரிநாதர் பாடிய கந்தர் அனுபூதியிலிருந்து ஒரு சிறப்பு வாய்ந்த நான்கு வரி பாடலைப் பாடினால் எப்பேர்ப்பட்ட துயரமும் நீங்கி வாழ்வில் சந்தோசம் பெறலாம்.
கந்தர் அனுபூதி:
முருகன் குமரன் குகன் என்று மொழிந்து
உருகும் செயல்தந்து உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே!
பொருள்:
யாராக இருப்பினும் முருகா,குமரா என்று அழைக்க அவன் அருளால் மனமும் உடலும் மேன்மை அடையும்.முருகனை அனுதினமும் சிந்தையில் வைத்து வழிபட,வானம் தாண்டி வசிக்கும் தேவர்களும் வாழ்த்தி வணங்குவார்கள்.
வயத்தம், தூய்மை, இயற்கையறிவு, முற்றறிவு, பற்றின்மை, பேரருள், எல்லாம்வன்மை, வரம்பிலா இன்பம் என்னும் 8 வகையான தெய்வீக குணங்களையும், குருவாக நின்று நீ எனக்கு அருள் புரிவாய் என்பது தான் இந்த பாடல் வரிகளின் அர்த்தம் ஆகும்.
மேலும்,ஒருவர் ஜாதகத்தில் குருவால் தேனும் பிரச்சனை இருந்தால், சுபகாரிய தடைகள் உங்கள் வாழ்வில் நடக்காமல் இருந்தால், அந்த நல்லதை எல்லாம் கொண்டு வந்து உங்கள் கையில் சேர்க்க வேண்டிய வேலையை இந்த பாடல் செய்யும்.
நாம் இந்த வேண்டுதலை வைக்கும் பொழுது குழந்தையாக முருகனிடம் அடம்பிடித்து,மனதை ஒருநிலை செய்து,காலை மாலை மற்றும் நேரம் கிடைக்கும் பொழுது பாடி வர உங்களுக்கான வெற்றி கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |