இன்றைய ராசி பலன்(12.01.2025)
மேஷம்:
உடல் நிலையில் உண்டான பாதிப்புகள் படிப்படியாக குறையும்.அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள்.நன்மையான நாள்.
ரிஷபம்:
பிறரிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.உங்கள் வீட்டிற்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.குடும்பத்தில் உண்டான பிரச்சன்னை படிப்படியாக குறையும்.எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
மிதுனம்:
மனதில் உண்டாகும் குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் இருந்தால் நன்மையான நாளாக அமையும்.தேவை இல்லாத வம்பு வழக்குகளில் ஈடுபடவேண்டாம்.நினைத்த வேலைகள் நினைத்தபடி நிறைவேறும்.
கடகம்:
நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளரை அனுசரித்துச் செல்லுங்கள்.குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.
சிம்மம்:
இன்று குடும்பங்களில் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.இன்று வியாபாரத்தை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து ஈடுபட்டால் வெற்றிகள் கிடைக்கும்.சொத்து சம்பந்தமான விஷயம் ஒரு தீர்விற்கு வரும்.
கன்னி:
பணியிடத்தில் உங்கள் திறமைக்கு மதிப்புண்டாகும். சிலர் புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் கவனம் செலுத்துவீர்கள்.முயற்சியால் முன்னேற்றம் காண்பீர். வருமானத்தில் இருந்த தடைகள் விலகும்.
துலாம்:
நீண்ட நாட்களாக திட்டமிட்ட வேலைகளை செய்துமுடிப்பீர்கள்.நேற்று வரை இருந்த மன அழுத்தம் குறையும்.உங்களுக்கு உண்டாகும் தடைகளை தாண்டி வெற்றி அடைவீர்கள்.
விருச்சிகம்:
தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். ஒவ்வொரு வேலையிலும் விழிப்புடன் செயல்படுவது அவசியம்.உங்கள் வேலைகளில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நன்மையாகும்.
தனுசு:
தாய் வழி உறவு உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள்.வெளியூர் பயணத்தில் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.நேற்றிருந்த சங்கடங்கள் தீரும்.கூட்டுத்தொழில் முன்னேற்றம் அடையும்.
மகரம்:
போட்டியாளர்களால் ஏற்பட்ட சங்கடம் விலகும். வெளியூர் பயணம் ஆதயம் தரும்.இழுபறியாக இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு கூடும்.
கும்பம்:
பணியிடத்தில் சிறு பிரச்னைகள் தோன்றும். சாதுர்யமாக செயல்பட்டு அதற்கு தீர்வு காண்பீர்.பூர்வீக சொத்தில் பிரச்னை தோன்றும். உறவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். கவனமாக செயல்படுங்கள்.
மீனம்:
சகோதிரிகள் வழியில் உங்களுக்கு ஏற்ற உதவுங்கள் கிடைக்கும்.உடல் உபாதைகள் ஏற்படும்.உடன் பணிபுரிபவர்களுடன் சிறு சிறு குழப்பம் உண்டாகலாம்.நிதானம் காப்பது நன்மையாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |