இன்றைய ராசி பலன்(20.12.2024)
மேஷம்:
பல நாள் நிலுவையில் இருந்த வழக்குகள் சாதகமாக முடியும்.கணவன் மனைவி இடையே சிறு சிறு தகராறுகள் வர வாய்ப்பு உள்ளது.ஆதலால் கவனமாக இருக்கவேண்டும்.நிதானமாக செய்லபட வேண்டிய நாள்.
ரிஷபம்:
மதியம் மேல் எதிர்பாராத பிரச்சனையில் மாட்டிக்கொள்ள வாய்ப்பு உள்ளது.பிறரிடம் பேசும் பொழுது வார்த்தையில் கவனமாக இருக்கவேண்டும்.வேலை செய்யும் இடத்தில் நெருக்கடிகள் சந்திக்கக்கூடும்.
மிதுனம்:
நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.பழைய பிரச்சனை மீண்டும் தொடரலாம்.இறைவழிபாடு நல்ல மனமாற்றம் கொடுக்கும்.கவனமாக இருக்கவேண்டிய நாள்.
கடகம்:
விருப்பம் நிறைவேறும். உறவுகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும்.பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். வேலையில் கவனம் தேவை. உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
சிம்மம்:
பிறரிடம் நம்பி எதையும் பகிர்ந்து கொள்ளவேண்டாம்.குடும்பத்தில் சுபகாரியம் செய்ய திட்டமிடுவீர்கள்.பிள்ளைகள் எதிர்காலம் பற்றி ஆழந்த சிந்தனைகள் உருவாகும்.
கன்னி:
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரிகள் சூழ்நிலை அறிந்து கொள்முதல் செய்வது நல்லது. புதிய முயற்சி இன்று எடுக்க வேண்டாம்.வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.
துலாம்:
மனதில் நிம்மதி நிலவும்.செய்யும் தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும்.குடும்பத்தில் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.சகதோரன் சகோதிரிகள் உங்களுக்கு துணை நிற்பார்கள்.
விருச்சிகம்:
போட்டிகளை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர். வருவாய் அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும். பிரபலங்களின் ஆதரவு கிடைக்கும்.உறவுகளால் லாபம் உண்டாகும்.
தனுசு:
உறவினர்கள் வருகையால் உங்கள் வீட்டில் சந்தோசம் உண்டாகும்.உடல் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.மனதில் இனம் புரியாத சந்தோசம் உண்டாகும்.வெளியூர் பயணம் சாதகமா அமையும்.
மகரம்:
வேலைப் பார்க்கும் இடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர்.வாகனப் பயணத்தில் நிதானம் வேண்டும். வீண் பிரச்னை இன்று உங்களைத் தேடி வரும். புதிய முயற்சி இன்று வேண்டாம்.
கும்பம்:
உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர் விலகிச் செல்வர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.நண்பர் ஆதரவால் உங்கள் செயல் லாபமாகும். குழப்பம் விலகி தெளிவடைவீர்.
மீனம்:
ஆன்மீக வழிபாடு உங்களுக்கு வெற்றியை தரும்.பிறர் மனம் அறிந்து செயல்படுவது எல்லா விதத்திலும் சிறந்த பலனை கொடுக்கும்.பிள்ளைகள் இடையே சிறு சிறு வாக்குவாதம் உண்டாகும்.கவனம் அவசியம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |