நீங்கள் ரிஷப ராசி பெண்ணா? உங்கள் திருமணத்திற்கு பொருத்தமான ராசி யார் தெரியுமா?
ஜோதிடத்தில் இரண்டாவது ராசியாக இருக்கக்கூடியது ரிஷப ராசி ஆகும். ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். ஆக ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் எப்பொழுதும் இயற்கையாகவே ஒரு இரக்க குணம் கொண்டவர்கள். பிறருடைய பேச்சுக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கேட்டு நடக்கக்கூடிய ஒரு நல்ல பண்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.
அந்த வகையில் அவர்கள் திருமணம் என்று வரும்பொழுது இவர்களை நன்றாக புரிந்து கொண்டிருக்க கூடிய ஒரு நபரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கண்டிப்பாக இருப்பார்கள். அப்படியாக ரிஷப ராசியில் பிறந்த பெண்களுக்கு எந்த ராசிகள் பிறந்த ஆண்கள் சிறந்த துணையாக இருப்பார்கள் என்று பார்ப்போம்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்கள் சற்று வசீகரமான தோற்றத்தை கொண்டவர்கள். இவர்கள் விரைவில் ஒருவரை தன் வசப்படுத்திக் கொள்வார்கள். அந்த வகையில் குடும்பம் என்று வந்துவிட்டால் எதையும் விட்டுக் கொடுக்காத மனநிலையில் அவர்கள் குடும்பத்திற்காக எதையும் செய்யக்கூடியவர்கள். ஆக கடக ராசியில் பிறந்த ஆண் ரிஷப ராசியில் பிறந்த பெண்களுக்கு துணையாக வரும் பொழுது ஒரு நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை இவர்கள் வாழ்கிறார்கள்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்த ஆண்கள் தலைமைத்துவத்தில் சிறந்து விளங்க கூடியவர்கள். இவர்களுடைய சிந்தனையை சற்று வித்தியாசமானதாக இருக்கும். மேலும் இவர்களுக்கு எவ்வளவு வேலை இருந்தாலும் தன்னுடைய வாழ்க்கை துணை கூட நேரம் செலவிடுவதை இவர்கள் முதன்மை கடமையாக நினைக்கக் கூடியவர்கள் என்பதால் இவர்களுக்கும் ரிஷப ராசியில் பிறந்த பெண்களுக்கும் நல்ல ஒற்றுமை உண்டாகும். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்றால் நல்ல புரிதலோடு வாழ்க்கை நடத்துவார்கள்.
மகரம்:
மகர ராசியில் பிறந்த ஆண்கள் மிகவும் உறுதியான மனநிலை கொண்டவர்கள். இவர்களுடைய இந்த குணமே ரிஷப ராசியினரை ஈர்க்கக் கூடியதாக இருக்கும். அதைப்போல் திருமண வாழ்க்கை என்று வந்துவிட்டால் இவர்கள் தன்னுடைய வாழ்க்கை துணைக்கு எதையும் செய்வதற்கு தயாராக இருக்கக்கூடியவர்கள்.தங்களுடைய வாழ்க்கையை துணையை இவர்கள் எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காத ஒரு அற்புதமான காதல் கொண்டிருப்பார்கள். ஆதலால் இவர்கள் இருவரும் திருமணம் செய்தால் ஒரு நல்ல பிணைப்பு உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |