2026 ராகு- கேது பெயர்ச்சி: சிம்மம் மற்றும் கும்ப ராசியினர் கவனமாக இருக்க வேண்டுமாம்
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களும் அவர்களுக்கு உரிய கால அவகாசத்தில் அவர்களுடைய இடத்தை மாற்றிக் கொள்வார்கள். அதில் நிழல் கிரகமாக கருதக்கூடிய ராகு கேதுவின் உடைய இடமாற்றம் ஜோதிடத்தில் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. இவர்கள் ஒன்றரை வருடங்களுக்கு ஒரு முறை தங்களுடைய ராசியின் இடத்தை மாற்றிக் கொண்டு இருப்பார்கள்.
இவர்கள் இடம் மாறும் பொழுது ராகு கேது 3, 6, 10,11,1- ல் இருபத்து நல்லது. மற்ற இடங்களில் இருப்பது பாதகமாக அமையும். அதிலும் குறிப்பாக 2,4,5,7,8, ராகு கேது இருந்தால் நமக்கு பல பாதிப்புகளை கொடுக்கிறது.
அப்படியாக வருகின்ற 2026 டிசம்பர் மாதம் வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் இருப்பார்கள். இவர்கள் ஏற்கனவே கடந்த 6 மாதங்களாக அங்கு தான் இருக்கிறார்கள். இன்னும் ஒரு வருடம் காலம் அவர்கள் அந்த ராசியில் தான் இருப்பார்கள்.

அதனால் சிம்ம ராசியினர் பொறுத்த வரையில் அவர்கள் தொழில் மற்றும் வியாபாரங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காரணம் கேது பகவான் சிம்ம ராசிக்கு பகை ஆவார். அதனால் இந்த காலகட்டங்களில் சிம்ம ராசியினர் குணத்தையே மாற்றி விடுவார். மிகவும் கடுமையாக நடந்து கொள்ள வைப்பார்.
இதனால் தேவை இல்லாத சண்டை பகை போன்றவை உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. அதேபோல் கும்ப ராசியில் ராகு பகவான் இருக்கிறார். இதனால் கும்ப ராசியினரை மிகவும் வேகமாக நடந்து கொள்ள வைப்பார். மிகவும் பந்தாவாக காட்டி கொள்ள வைப்பார். ஆக, கும்ப ராசியினர் இந்த காலகட்டத்தில் அவசரமாக எந்த ஒரு முடிவும் எடுக்காமல் இருப்பது நல்லது.

அதே சமயம் சிம்மம் மற்றும் கும்ப ராசியினர் அவர்களின் வாழ்க்கை துணையின் உடல் நிலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்களிடத்தில் சற்று தூரமாகவே இருங்கள். அதே போல் புதிய நட்புகள் அறிமுகம் கிடைக்கும் பொழுது மிகுந்த கவனம் தேவை.
அதேபோல் கடகம் மற்றும் மகர ராசியினருக்கு வாக்கு ஸ்தானத்தில் பாம்புகள் இருப்பதால் பேச்சில் மிகுந்த கவனம் தேவை. சில நேரத்தில் என்ன பேசுகின்றோம் என்று தெரியாமல் பேசி சண்டையில் சிக்கி கொள்ளும் வாய்ப்புகள் உள்ளது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |