சிவபெருமானுக்கு இங்குதான் திருமணம் நடந்ததாம்.. பலரும் அறிந்திடாத வரலாறு
ஒரு மனிதனுக்கு திருமணம் வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வாகும். ஆனால் இந்த திருமணம் நாம் நினைத்தது போல் நினைத்த நேரத்தில் நடப்பதில்லை. ஜாதகத்தில் தோஷம் என பல இடையூறுகளால் திருமணம் சிலருக்கு தாமதத்தை கொடுக்கிறது.
அப்படியாக, ஒருவருக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு ஜோதிடர்கள் நிறைய கோவில்களை அவர்களுடைய ஜாதகத்திற்கு ஏற்ப பரிந்துரைப்பார்கள்.
ஆனால் பொதுவாக ஒருவருக்கு திருமணம் தாமதம் இருக்கிறது என்றால் இவர்கள் அனைவரும் கட்டாயம் இங்கு சென்று வழிபாடு செய்தால் நிச்சயம் விரைவில் திருமணம் நடக்கும்.
காரணம் இங்குதான் சிவபெருமான் பார்வதி தேவியை திருமணம் முடித்துக் கொள்ள வேள்வி நடைபெற்றது. ஆதலால் இங்கு சென்று வழிபாடு செய்பவர்களுக்கு நிச்சயம் விரைவில் திருமணம் நடக்கும் என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் குத்தாலம் அருகில் அமைந்துள்ளது திருவேள்விக்குடி அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயில் திருமண தடையை நீக்குவதற்கான முக்கியமான பரிகார கோவிலாக இருக்கிறது.

வரலாறு:
ஒருமுறை அரசு குமாரன் ஒருவனுக்கு திருமணம் நிச்சயம் செய்த பிறகு அந்தப் பெண்ணினுடைய பெற்றோர்கள் இறந்து விடுகிறார்கள். அந்த காரணத்தினால் அரசுக்குமாரனுக்கு உறவினர்கள் பெண் தர மறுத்து அந்த திருமணத்தை நிறுத்தியும் விடுகிறார்கள். அரசகுமாரன் உறவினர்களிடம் எவ்வளவோ கேட்டும் அவர்கள் திருமணம் செய்து கொடுக்க சம்மதிக்கவில்லை. பிறகு அவர் இந்த தலத்திற்கு வந்து வழிபாடு செய்கிறார்.
நின்று போன தன்னுடைய திருமணம் மீண்டும் நடைபெற வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்கிறார். அவருடைய வேண்டுதலை ஏற்றுக்கொண்ட இறைவன் ஒரு பூதத்தை அனுப்பி அந்த பெண்ணை கொண்டு வர செய்து அரச குமாரனுக்கு அந்தப் பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார் என்பது புராணம் ஆகும்.

தல வரலாறு:
ஒரு முறை பார்வதி தேவி சிவபெருமானிடம் சற்று அலட்சியமாக நடந்திருக்கிறார். அதனால் மிகுந்த கோபம் கொண்ட சிவபெருமான் பார்வதி தேவிக்கு பூவுலகில் பசுவாக வாழ சாபம் விடுகிறார். பிறகு உமாதேவி தன்னுடைய தவறை நினைத்து வருந்தி சிவபெருமானிடம் சாப விமோட்சனம் கேட்க, சரியான நேரம் வரும் பொழுது என் முன் தோன்றி என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சிவபெருமானிடம் கேட்டுக்கொள்கிறார்.
சிவபெருமானும் அதற்கு வரம் அளிக்கிறார். அதனை அடுத்து பார்வதி தேவி அவருடன் திருமகள், கலைமகள், இந்திராணி ஆகியோரும் பசு உருவம் எடுத்து பூமிக்கு வருகிறார்கள். சிவபெருமான் பசு மெய்ப்பவராக உருவெடுத்து அப்பசுக்களை பராமரித்தும் வருகிறார்.
அப்படியாக பசு உருவம் எடுத்த பார்வதி தேவி பொழிந்த பாலால் திருமேனி குளிர பெற்ற சிவபெருமான் அம்பிகைக்கு சுய உருவம் கொடுத்து அருளினார். சுய உருவம் பெற்ற உமாதேவி சிவபெருமானை நினைத்து 16 திங்கட்கிழமை விரதம் இருந்து மணலால் செய்யப்பட்ட லிங்கத்திற்கு பூஜை செய்து வர 17 வது திங்கட்கிழமை சிவபெருமான் தோன்றி பார்வதி தேதியை திருமணம் செய்து கொண்டார் என்ற தலபுராணம் சொல்கிறது.
மேலும் சிவன் திருமணம் நடப்பதற்கு முன் செய்ய வேண்டிய திருமண சடங்குகள் பங்கன தாரணம், யாகம் வளர்ந்து செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள் ஆகியவை இந்த தலத்தில் தான் நடைபெற்றது. இதில் பிரம்மா தானே முன்வந்து எல்லா காரியங்களையும் எடுத்துச் செய்தார். இதன் அடிப்படையில் திரு வேள்விக்குடி என்ற பெயர் இத்லத்திற்கு வந்தது.

பரிகாரங்கள்:
கௌதகா பந்தன தீர்த்தம் நீரூற்றில் நீராடி வந்தபிறகு இறைவன் மற்றும் இறைவியை காண செல்ல வேண்டும். அவ்வாறு அவர்கள் அந்த தீர்த்தத்தில் நீராடும் பொழுது அவர்கள் பெற்ற சாபம் தோஷம் யாவும் விலகி திருமணம் விரைவில் நடைபெறும் என்பதற்காக செய்ய வேண்டும். அதோடு கண்ணாடி வளையல்கள் மாலையாக கோர்த்து மூலவருக்கு அணிவது மூலமாகவும் திருமண தடை விலகும் என்று கூறப்படுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |