திருமண பொருத்தத்தில் ஜோதிடர்கள் செய்யும் முக்கியமான தவறு என்ன?
ஜோதிட ரீதியாக நாம் திருமண பொருத்தம் பார்த்து திருமணம் செய்யக்கூடிய வழக்கத்தை பல ஆண்டு காலமாகதமிழ்நாட்டு கலாச்சாரத்தில் பின்பற்றி வருகிறோம். அந்த வகையில் ஜோதிட ரீதியாக திருமண பொருத்தம் பார்க்கின்ற பொழுது பலருக்கும் பல சந்தேகங்கள் வருகிறது.
ஒரே ராசி அல்லது நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்யக்கூடாது என்று பல ஜோதிட ரீதியாக தகவல்கள் பேசப்பட்டு வருகிறது.
ஆனால், ஒரே ராசி மற்றும் ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தில் ஒற்றுமையாக வாழ முடியும் என்கின்ற கருத்தை நம்மிடம் எடுத்து வைக்கிறார் ராஜநாடி க. பார்த்திபன் அவர்கள்.
மேலும், பலரும் நட்சத்திர பொருத்தத்தை மட்டும் பார்த்து தீர்மானித்து விடுகிறார்கள். ஆனால், ஒட்டுமொத்த ஜாதக அமைப்பும் பார்த்து தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்க வேண்டும். வெறும் நட்சத்திரத்தைக் கொண்டு நாம் ஒருவருடைய வாழ்க்கையை இப்படித்தான் இருக்கும் என்று தீர்மானித்து விட முடியாது.
அதேபோல், ஒரு சில நட்சத்திரங்கள் மாமியார் மற்றும் மாமனாருக்கு ஆகாது என்று சொல்வது கட்டுக்கதைகளாகவே உள்ளது.
ஆதலால், ஜோதிடத்தின் பெயரில் நாம் பயப்பட தேவையில்லை நட்சத்திர பொருத்தங்களை மட்டும் வைத்து முடிவு எடுப்பதும் சரியானது இல்லை என்று பல விஷயங்களை ஜோதிட ரீதியாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அதை இந்த காணொளியில் பார்த்த தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |