இந்த திருமண பொருத்தம் இருந்தால் அவர்களை யாராலும் பிரிக்க முடியாது

By Sakthi Raj May 07, 2026 04:29 AM GMT
Report

திருமணம் என்பது மிகவும் முக்கியமான பந்தமாகும். இந்துக்களில் திருமணம் செய்யும் பொழுது நிச்சயமாக ஆண் பெண் இவருடைய ஜாதகம் பொருத்தம் பார்த்து செய்வார்கள். அந்த வகையில் ஒவ்வொருவர் ஜாதகத்திலும் கிரகங்கள் எங்கு அமைந்து இருக்கிறது அவை இருவருக்கும் சாதகமாக இருக்குமா என்று எல்லாம் ஆலோசித்து தான் திருமணம் செய்வார்கள்.

அப்படியாக, மணப்பெண் மணமகன் ஜாதகத்தில் கிரகங்கள் இருக்கக்கூடிய இடமும், அவை பார்க்கக்கூடிய இடமும் தான் மிகவும் முக்கியமாக இருக்கிறது. ஆக, இந்த கிரக பார்வைகள் சரியாக இல்லாத நேரத்தில் கணவன் மனைவி இடையே ஒரு நல்ல புரிதல் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.

அதுவே வசிய பொருத்தம் நன்றாக இருக்கின்ற நேரத்தில் எவ்வளவு பெரிய சண்டை வந்தாலும் மறு நொடியில் எதுவும் நடக்காதது போல் இருவரும் சேர்ந்து கொள்வார்கள். இதுதான் திருமண வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான ஒன்று.

ரிஷப ராசியினருக்கும் இந்த ராசிகளுக்கும் செட் ஆகாதாம்.. யார் தெரியுமா?

ரிஷப ராசியினருக்கும் இந்த ராசிகளுக்கும் செட் ஆகாதாம்.. யார் தெரியுமா?

எலியும் பூனையுமாக திருமண வாழ்க்கையில் இருப்பது என்பது மன அழுத்தத்தையும் பிரிவையும் மட்டுமே கொடுக்கும். மேலும், ஒரு சிலருக்கு ஜோதிடத்தில் இரண்டாம் வீடு குடும்ப ஸ்தானம் என்று அழைக்கின்ற இடத்தில் பாவ கிரகங்கள் இருக்கிறது என்றால் அவர்களுக்கு பல்வேறு வகையான பிரச்சனைகள் திருமணத்தில் சந்திக்கக்கூடும்.

அவர்கள் கிரக அமைப்புகளுக்கு ஏற்ப உரிய பரிகாரம் செய்தால் அந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். மேலும், திருமண பந்தம் சிறப்பாக அமையவும் செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் மற்றும் சில கிரகங்கள் பலவீனமாக இருப்பவர்கள் என்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த காணொளியில் பார்ப்போம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US