2026: செவ்வாய் பெயர்ச்சியால் அடுத்த 100 நாட்கள் அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் யார்?

By Sakthi Raj Nov 26, 2026 04:06 PM GMT
Report

ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு காரகத்துவம் இருக்கிறது. அந்த வகையில், நெருப்பு கிரகமான செவ்வாய் பகவான் நவம்பர் 12 முதல் மார்ச் 9ஆம் 2027 மார்ச் ஒன்பதாம் தேதி வரை சிம்ம ராசியில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார்.

செவ்வாய் பகவான் தான் ஒருவருக்கு வீரம், வேகம், ஆற்றலை தரக்கூடியவராக இருக்கிறார். அந்த வகையில், சிம்ம ராசியில் செவ்வாய் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு மூன்றாம் இடத்திலும், துலாம் ராசிக்கு 11ஆம் இடத்திலும், மீன ராசிக்கு ஆறாம் இடத்திலும் சிம்ம ராசிக்கு ஜென்ம ஸ்தானத்தில் என இவர்களுக்கு பெரிய அளவில் நன்மைகளை தரக்கூடியவர்களாக இருக்கிறார். அதைப்பற்றி பார்ப்போம்.

2026: செவ்வாய் பெயர்ச்சியால் அடுத்த 100 நாட்கள் அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் யார்? | Mars Transit Leo Horoscope 2026 Prediction

இன்றைய ராசிபலன்(27-11-2026) 12 ராசிகளுக்கும் இன்று என்னென்ன மாற்றங்கள் காத்திருக்கின்றது?

இன்றைய ராசிபலன்(27-11-2026) 12 ராசிகளுக்கும் இன்று என்னென்ன மாற்றங்கள் காத்திருக்கின்றது?

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி அடுத்த 100 நாட்களுக்கு மிகவும் சாதகமான பலன்களை கொண்டு வந்த சேர்க்க போகிறது. மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி காணப்படும். கடினமான உழைப்புகள் வழியாக எதையும் வெற்றி கொள்வீர்கள். தொழில் தொடர்பான முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் அமையும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவானுடைய இந்த பெயர்ச்சி இவர்களுக்கு தொழில் சார்ந்த நல்ல முன்னேற்றத்தை கொடுக்கப் போகிறது. வேலை தொடர்பாக மதிப்பையும் மரியாதையையும் பெறுவீர்கள். பொருளாதார சிக்கல்கள் விலகும்.

இவர்களுக்கு அடுத்த நூறு நாட்கள் செவ்வாய் பகவான் பலவிதமான நன்மைகளை தரப்போகிறார். வேலை தொடர்பாக மதிப்பும் மரியாதையும் உயரும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு லாபத்தை அதிகரிக்க கூடிய காலகட்டமாக அமையப்போகிறது. இவர்களுக்கு பல்வேறு விதத்தில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். இவர்கள் மேற்கொள்ளக்கூடிய காரியங்களில் நிச்சயம் வெற்றி வாய்ப்புகள் உருவாகும்.

புதிய வருமானம் பெறுவதற்கான வழிவகைகளை கண்டு கொள்வீர்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை உருவாகும்.   

Disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US