அம்பிகைக்கு உகந்த வாசனை பொருட்களில் ஒன்று மருதாணி
அம்பாள் என்றால் மிகவும் சக்தி வாய்ந்தவள்.எவர் ஒருவர் அம்பாளை தரிசிக்கிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களும் தைரியமும் பிறக்கும்.
அப்படியாக அம்பாளை தரிசிக்கும் பொழுது வெறும் கைகளோடு பூஜை செய்வதை விட அம்பிகைக்கு உகந்த சிவப்பு வண்ணத்தோடும், நல்ல வாசனையோடும் பூஜை செய்வது மிகுந்த பலன்களை தரும்.
அதாவது நம் கைகளில் மருதாணி வைத்து கொண்டு அம்பாளுக்கு தூப, தீப, ஆராதனைகள் செய்யும் போது தேவி இன்னும் மகிழ்கிறாள் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
மற்ற காலங்களில் கையில் மருதாணி வைத்து பூஜை செய்ய முடியாவிட்டாலும், நவராத்ரி காலங்களில் அவசியம் வைத்துக்கொண்டு பூஜை செய்தால் அம்பாள் மனம் குளிர்கிறது என்கிறார்கள்.
ஆக நாமும் அம்பாளை பூஜிக்கும் பொழுது மருதாணி வைத்துக்கொள்ளலாம், நவராத்ரி காலங்களில் இல்லத்திற்கு வரும் பெண்களுக்கும் மருத்துவ குணம் நிறைந்த மருதாணி வைத்துவிடலாம்.
மருதாணி என்பது அழகு என்பதை தாண்டி அதில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது.ஒருவர் மருதாணி வைக்க அவர்கள் உடம்பில் உள்ள தீய சக்திகள் விலகுகிறது.
பழைய காலத்தில் பெண்கள் இருக்கும் வீட்டில் நிச்சயம் மருதாணி செடி இருக்கும்.மருதாணி செடி வீட்டில் இருப்பதால் மஹாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.
மேலும் வீட்டில் உள்ள பெண்கள் மருதாணி கையில் மறைய தொடர்ந்து வைத்து பூஜிப்பது என்பது வழக்கமாக வைத்திருந்தனர்.
ஆனால் இப்பொழுது அது எல்லாம் தொலைந்து போனது.ஆக அம்பாளுக்கு பிடித்த மருதாணி கைகளில் வைத்து அம்பாளின் பரிபூர்ண அருளை பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |