இன்றைய ராசி பலன்(22.02.2025)
மேஷம்:
இன்று உங்களுக்கு சில உறவினர்கள் பற்றிய உண்மை தெரிய வரும்.ஒரு சிலருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்படலாம்.கவனமாக இருக்க வேண்டும்.கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
ரிஷபம்:
பேச்சுக்களில் கவனம் அவசியம்.அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக சிலர் மாறுவார்கள்.நண்பர்கள் உதவியால் ஆதாயம் உண்டாகும்.பெற்றோர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
மிதுனம்:
உங்கள் செல்வாக்கு உயரும்.கணவன் மனைவி இடையே கருத்துவேறுபாடுகள் விலகும்.தாய் வழி உறவால் சில சங்கடம் உருவாகும்.குலதெய்வ வழிபாடு நன்மை அளிக்கும்.இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.
கடகம்:
விவேகத்துடன் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்.உறவினர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர்.
சிம்மம்:
தேவை இல்லாத அலைச்சல் உண்டாகும்.மனதில் சில சங்கடம் உருவாகலாம்.எதையும் நிதானமாக யோசித்து செயல்படுவது அவசியம்.ஒன்றுக்கும் மேற்பட்ட பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
கன்னி:
வியாபாரத்தில் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்.வியாபாரம் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.
துலாம்:
இன்று மனதில் தைரியமும் தன்னம்பிகையும் வளரும்.பணியில் உங்களுக்கான அங்கீகாரம் கூடும்.நணபர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.பெருமாள் வழிபாடு சிறந்த மாற்றம் கொடுக்கும்.
விருச்சிகம்:
வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த வருவாய் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.ராசிக்குள் சஞ்சரிக்கும் சந்திரனால் மனக்குழப்பம் உண்டாகும். திட்டமிட்ட வேலை தள்ளிப் போகும்.
தனுசு:
சிலர் உங்களை சீண்டி பார்ப்பார்கள்.வேலைகளில் மட்டும் உறுதியாக இருப்பது நல்லது.நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர். தடைபட்ட வருவாய் தேடி வரும்.
மகரம்:
எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். அதன்பின் அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். வரவு செலவில் கவனம் தேவை.வரவேண்டிய பணம் வரும். இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும்.
கும்பம்:
பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.
மீனம்:
நேற்று முடிவிற்கு வராத வேலை ஒன்று நல்ல முடிவிற்கு வரும்.பிரிந்த சொந்தங்கள் ஒன்று சேருவார்கள்.உங்கள் மனத்தில் உள்ள குழப்பம் விலகும்.நினைத்ததை சாதிப்பீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |