பீஷ்மர் ஜெபிக்கச் சொன்ன சக்தி வாய்ந்த நாராயணின் 24 திருநாமங்கள்
நம்மை காக்கும் கடவுளாக திகழ்கிறார் நாராயணன்.எவர் ஒருவர் நாராயணனை மனதார நம்பிக்கையோடு வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு எந்த ஒரு இன்னல்களும் வருவதில்லை.அவ்வாறே வந்தாலும் அது அவர்களுக்கு இறுதியில் நன்மையில் தான் முடியும்.
காரணம்,தூய பக்தியோடும் அன்போடும் நாம் இறைவனை வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய வேண்டுதலுக்கு அதிக அளவில் சக்தி பிறக்கிறது.அது கடும் தவமாக மாறுகிறது.அப்படியாக நாராயணா என்றாலே இன்பம் பொங்கிடும்.
அதிலும் நாரயணனின் மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்தால் அவன் அருளால் அசைக்கமுடியாத சக்தி கிடைக்கிறது என்கிறார்கள்.மேலும்,பீஷ்மரும் ஜெபிக்கச் சொன்ன சக்தி வாய்ந்த 24 மந்திரங்கள் இது.இதை முழுமனத்தாரா தினமும் காலையிலும் மாலையிலும் பூஜை செய்யும் வேலையில் அமர்ந்து சொல்லி வழிபாடு செய்து வர வாழ்க்கையில் நல்ல திருப்பம் கிடைக்கும்.
24 திருநாமங்கள்
ஓம் கேசவாய நமஹ :
ஓம் சங்கர்ஷனாய நமஹ :
ஓம் நாராயணாய. நமஹ :
ஓம் வாசுதேவாய. நமஹ :
ஓம் மாதவாய. நமஹ ஓம் ப்ரத்யும்னாய. நமஹ :
ஓம் கோவிந்தாய. நமஹ :
ஓம் அனிருத்தாய. நமஹ :
ஓம் விஷ்ணவே நமஹ ஓம் புருஷோத்தமாய. நமஹ:
ஓம் மதுசூதனாய. நமஹ :
ஓம் அதோக்ஷஜாய. நமஹ :
ஓம் த்ரிவிக்ரமாய. நமஹ :
ஓம் லக்ஷ்மி நரசிம்ஹாய. நமஹ :
ஓம் வாமனாய. நமஹ :
ஓம் அச்சுதாய. நமஹ :
ஓம் ஸ்ரீதராய. நமஹ :
ஓம் ஜனார்தனாய நமஹ :
ஓம் ஹ்ரிஷீகேசாய. நமஹ :
ஓம் உபேந்த்ராய. நமஹ :
ஓம் பத்மநாபாய. நமஹ :
ஓம் ஹரயே நமஹ :
ஓம் தாமோதராய. நமஹ :
ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ :
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |