மிதுன ராசிக்காரர்களுக்கும் இவர்களுக்கும் செட் ஆகாதாம்.. யார் தெரியுமா ?
ஜோதிடத்தில் புதன் பகவானின் ஆதிக்கத்தை பெற்ற மிதுன ராசியினர் காற்று ராசியாக இருக்கிறார்கள். இவர்கள் எப்பொழுதும் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று நினைப்பவர்கள். அது மட்டுமல்லாமல் இவர்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது.
எல்லா விஷயங்களையும் சுயமாக சிந்தித்து செயல்படவே முயல்பவர்கள். இவர்களுடைய பேச்சு திறனால் நிறைய இடங்களில் இவர்கள் காரியங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது உண்டு.
அந்த வகையில், மிதுன ராசியினருக்கு எந்த ராசியினர் நல்ல பிணைப்போடு இருக்கக்கூடியவர்களாகவும் எந்த ராசிகளிடம் இவர்கள் பழகவே முடியாத நிலை கொண்டவர்கள் என்று பார்ப்போம்.
மிதுன ராசியினருக்கு காற்று ராசியினர்தான் ஒற்றுப் போகக் கூடிய ராசியாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இவர்கள் ராசிக்கு ஒன்று ஐந்து, ஒன்பது ராசிகள் இவர்களுக்கு ஒரு நல்ல பலனை கொடுக்கிறது.
அதாவது துலாம் ராசிகளிடம் இவர்கள் பழகும் பொழுது இவர்களுக்கு அதிர்ஷ்டமானதாகவும் நல்ல நட்பு வழங்கக் கூடியதாகவும் இருக்கிறது. அதேபோல் மிதுன ராசியினருக்கு நிலம் ராசியான கன்னி, மகரம், ரிஷபம் ஆகிய ராசியினர் ஒத்துப்போவதில்லை.
இவர்களுடன் இவர்கள் பழகும் பொழுது மன கசப்புகளும் வீண் விவாதங்களும் வருகின்றது. மேலும், மிதுன ராசியினர் பற்றி பல்வேறு விஷயங்களை முழுமையாக இந்த காணொளியில் பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |