2025 மாசி அமாவாசை பலன்கள்:ராஜ யோகம் பெற போகும் அந்த 3 ராசிகள் யார்?
மௌனி அமாவாசையை மாசி அமாவாசை என்றும் அழைப்பார்கள்.இந்த வருடம் 2025 இல், மௌனி அமாவாசை, ஜனவரி 29 ஆம் தேதி புதன்கிழமை வரவுள்ளது.ஜோதிட சாஸ்திரத்தின் படி, மௌனி அமாவாசையன்று பல அரிய யோகங்கள் உருவாகின்றன, இது 12 ராசிகளின் மீது பல்வேறு விதங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதாவது அன்றைய நாளில் ஒன்பது கிரகங்களில் 3 பெரிய கிரகங்களின் சேர்க்கை உண்டாகும்.ஜனவரி 28 அன்று, சந்திரன் மகர ராசியில் நுழைகிறார்,ஜனவரி 29 அன்று, ஏற்கனவே இந்த ராசியில் இருக்கும் சூரியன் மற்றும் புதன் சேர்க்கை திரிகிரஹி யோகத்தை உருவாக்கும்.
இது மட்டுமல்லாமல், புதன்-சூரியனால் புதாதித்ய யோகமும், மகர ராசியில் குருவின் 9வது அம்சத்தினால் நவபஞ்சம ராஜயோகமும் உருவாகும்.இதனால் 3 ராசிகளுக்கு மிக பெரிய யோகம் காத்திருக்கிறது.அவர்கள் யார் என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு மௌனி அமாவாசை நாள் மனநிலையில் ஒருவித அமைதியை கொடுக்கும்.பலரும் ஆன்மீக பயணம் மேற்கொள்வார்கள்.நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.புதிய நட்பு வட்டார அறிமுகத்தால் நன்மை உண்டாகும்.பெரிய மனிதர்கள் சந்திப்புகள் ஆதாயமாக அமையும். பல வருடம் நிலுவையில் இருந்த வழக்கு முடிவிற்கு வரும்.
துலாம்:
மாசி அமாவாசை துலாம் ராசிக்காரர்களுக்கு ஒரு வித தெளிவு மனப்பான்மை கொடுக்கும்.வெளியூர் சென்று மகிழ்ச்சியாக இருக்கும் காலம்.பலருக்கும் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.அலுவலக்தில் உங்களுக்கான பாராட்டுக்கள் சிறப்பாக அமையும்.தொழில் செய்பவர்களுக்கு இது ஒரு பொற்காலம்.உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும் நேரம்.
மீனம்:
மாசி அமாவாசை அல்லது மௌனி அமாவாசை நாள் மீன ராசிக்காரர்களுக்கு எதிர்பாரா திருப்புமுனையாக அமைய உள்ளது.உடல் நலனில் நல்ல மாற்றம் உருவாகும்.எதிர்காலம் பற்றிய கவலை விலகும்.நீண்ட நாள் ஆசைகள் படிப்படியாக நிறைவேறும்.உடன் பிறந்தவர்களால் உண்டான பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |