இன்றைய ராசி பலன்(16-05-2025)

Report

மேஷம்:

இன்று குடும்ப சுபநிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். எதையும் தீர ஆலோசித்து முடிவு செய்வதால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். மதியம் மேல் சில முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

ரிஷபம்:

இன்றைய தினம் தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் நிதானத்தை கடைப்பிடிப்பது நன்மை தரும். மனதில் தேவை இல்லாத குழப்பங்கள் தோன்றி மறையலாம். எதிலும் நீண்ட கவனம் தேவை.

மிதுனம்:

குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்புகள் விலகும். மனதில் ஒருவித நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். சகோதரர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

கடகம்:

தடைகளைத் தாண்டி முயற்சியில் வெற்றி அடைவீர். உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தொழில் போட்டியாளர்கள் விலகிச் செல்வர். செல்வாக்கு உயரும்.

சிம்மம்:

இன்று பிறரால் சாதிக்க முடியாத முக்கியமான விஷயம் ஒன்றை நீங்கள் சாதித்து காட்டுவீர்கள். குடும்ப உறுப்பினரை அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். நன்மையான நாள்.

கன்னி:

உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். பல வருடங்களுக்கு பிறகு உங்கள் நண்பர்களை சந்திப்பீர்கள். தேவை இல்லாத அலைச்சல் உண்டாகும். எடுக்கும் முயற்சியில் வெற்றிகள் கிடைக்கும்.

2025 வைகாசி விசாகம்: அன்று செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த முருகப்பெருமான் வழிபாடு

2025 வைகாசி விசாகம்: அன்று செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த முருகப்பெருமான் வழிபாடு

துலாம்:

மனதில் உயர்ந்த எண்ணங்கள் தோன்றும். பெரியவர்கள் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். குடும்ப உறுப்பினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதையும் துணிச்சலாக செயல்பட்டு சாதிப்பீர்கள்.

விருச்சிகம்:

வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் விருப்பம் நிறைவேறும்.

தனுசு: 

பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். குடும்பத்தில் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். தொழிலில் இன்று சில சிக்கலை சமாளித்து வெற்றி அடையவேண்டிய சூழல் இருக்கும்.

மகரம்:

புதிய முதலீடுகள் இன்று வேண்டாம். வியாபாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம். திடீர் செலவுகளால் நெருக்கடி ஏற்பட்டாலும் அதற்கேற்ற வருமானம் வரும்.

கும்பம்: 

பொன் பொருள் சேர்க்கையில் கவனம் செல்லும். முயற்சியால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நண்பர்களால் லாபம் உண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்.

மீனம்:

பழைய பிரச்சனை ஒன்று நல்ல முடிவை பெரும். அலுவலகத்தில் நீண்ட நாட்களாக சந்தித்த பிரச்சனை ஒன்று விலகும். மனதில் இறை சிந்தனை அதிகரிக்கும். சிலர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US