மயிலாடுதுறையில் அருள்தரும் ஆலயங்களும், ஆன்மிக ஸ்தலங்களும்
பார்வதி தேவி மயில் வடிவம் எடுத்து காவிரியில் பவனி வந்து சிவனை வழிபட்டதால் மயிலாடுதுறை என பெயர் பெற்றது.
இவ்வூருக்கு மயூரபுரம், மாயவரம், மாயூரம் என பல பெயர்கள் உண்டு.
ஆன்மிக பூமி வைத்தீஸ்வரன் கோவில், கீழப்பெரும்பள்ளம் போன்ற நவக்கிரகங்கள் மயிலாடுதுறை நகரத்திற்கு மிகவும் அருகில் உள்ளன.
ஆன்மிக ஸ்தலங்கள்
தருமபுரம் ஆதீனம்
தருமபுரம் ஆதீனம் அல்லது தருமை ஆதீனம் என்பது சைவ மடங்களுள் முக்கியமான ஒன்றாகும். மயிலாடுதுறையில் இம்மடம் அமைந்துள்ளது. 1987-இல் இருந்து சுமார் 27 சிவாலயங்கள் இதனுடைய கட்டுப்பாட்டின் கீழ் இருகின்றன.
இந்த மடம் குருஞான சம்பந்தரால் துவங்கப்பட்டது.
திருவாவடுதுறை ஆதீனம்
ஸ்ரீ மெய்கண்டாரின் வழிவந்த சித்தர் சிவப்பிரகாசரிடம் ஞானோபதேசம் பெற்ற அருள்திரு நமசிவாய மூர்த்திகள் அவர்களால் கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பெற்றது.
இந்த திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் தென் இந்தியாவிலுள்ள சைவ ஆதீனங்களில் முதன்மையான ஆதீனமாகும்.
இது மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் திருவாலங்காட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
மயிலாடுதுறை துலா கட்டம் எனும் முழுக்குத்துறை
காவிரி கரைபுரண்டோடும் மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் முழுவதும் துலா கட்டத்தில் சுவாமி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
பல மாநிலங்களில் இருந்தும் மக்கள் துலா ஸ்தானம் செய்ய துலா கட்டம் வருவார்கள். ஐப்பசி மாதம் சூரியன் துலா ராசியில் பிரவேசம் செய்கிறார். அதனால் துலாமாதம் என்று ஐப்பசி மாதத்தை சொல்வார்கள். துலாஸ்தானம் செய்ய. கடை முழுக்கிற்கு வர முடியவில்லை என்றால் கார்த்திகை ஒன்றில் நடக்கும் "முடவன் முழுக்கில் "கலந்து கொள்வார்கள்.
இந்த முடவன் முழுக்குக்கு என்று தனிக்கதையே உள்ளது. இந்த இடத்தில முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அவர்களுக்கு முத்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்
மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று.
இத்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறையில் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில்தான் திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த முதலாம் திருமுறையின் 38வது திருப்பதிகம் 404 முதல் 414 வரையிலான திருப்பதிக பாடல்கள், மூன்றாம் திருமுறையின் 748 முதல் 758 வரையிலான பாடல்கள் மற்றும் ஐந்தாம் திருமுறையின் 387 முதல் 397 வரையிலான பாடல்கள் பாடப்பெற்றது.
இத்தலத்தில் அம்பாள் மயில் வடிவில் வழிபட்டார் என்பது நம்பிக்கை. காசிக்கு சமமான ஆறு திருத்தலங்களில் இத்தலம் ஒன்று.
இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள இறைவன் மயூரநாதர், இறைவி அபயாம்பிகை இக்கோவிலில் வழிபட்டு வந்தால் கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும் முன்ஜென்ம பாவம் விலகும் என்றும் நம்பப்படுகிறது
வைத்தீஸ்வரன் கோயில்
வைத்தீஸ்வரன் கோயில் நவக்கிரகங்களில் செவ்வாய் ஸ்தலமான வைத்தியநாதர் சுவாமி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் சிவன் இந்த ஸ்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
5 கோபுரங்கள் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது ஸ்தலத்தின் சிறப்பு. பக்தர்களுக்கு நோய்களை தீர்க்க பூலோகம் வந்த தன்வந்திரி முறையாக மருத்துவம் பார்க்காததால், சிவன் மருத்துவராகவும், அம்பிகை மருத்துவச்சியாகவும் தோன்றியதாக ஐதீகம்.
சுமார் 2000 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த இந்த ஸ்தலத்தில் இறைவன் சிவபெருமான் வைத்தியநாதர் என்றும். அம்பாள் தையல் நாயகி எனவும் அழைக்கப்படுகிறார்கள்.
முன்னொரு காலத்தில் இந்த குள கரையில் சதானந்த முனிவர் தவம் செய்து கொண்டிருந்த போது ஒரு பாம்பு தவளையை முழுங்க முயன்றது, அப்போது அவற்றை சதானந்த முனிவர் சபித்தார். அதன் காரணமாக இன்று வரை இந்த குளத்தில் பாம்பு, தவளை போன்றவை காணப்படுவது இல்லையாம்.
இந்த கோவிலில் பக்தர்கள் தங்கள் பிராத்தனை நிறைவடைந்து உடல் சுகமானதும் கல் உப்பும் , மிளகும் வாங்கி வந்து அதற்கென உள்ள இடத்தில் கொட்டி தன் பிராத்தனைக்கு நன்றி தெரிவிக்கினறனர்.
கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில்
கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள சிவத்தலம் ஆகும்.
இத்தலத்தின் மூலவர் நவக்கிரங்களில் ஒருவரான கேது பகவான் ஆவார்.
இச்சிவாலயத்தின் மூலவரை நாகநாதர் எனவும், அம்பாள் சவுந்தர்யநாயகி எனவும் அழைக்கப்படுகின்றார்.
ஜாதகத்தில் கேது நீச்சம் அடைந்தவர்களும், கேது தசை நடப்பவர்களும் இங்கு வந்து பரிகார பூஜைகள் செய்து செல்கின்றனர்.
சீர்காழி சட்டைநாதர் கோயில்
சீர்காழி சட்டைநாதர் கோயில், பிரம்மபுரீஸ்வரர் கோயில் என்றும் தோணியப்பர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது என்பது இந்தியாவின் மயிலாடுதுறை அருகில் சீர்காழியில் அமைந்துள்ள சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும். தேவாரப் பாடல்களால் பாடல் பெற்ற ஸ்தலம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இது மூன்று அடுக்குகளில் மூன்று வெவ்வேறு சிவன் சன்னதிகளைக் கொண்ட பழமையான கோவில் வளாகமாகும்.
இரண்டாம் நிலை பெரியநாயக்கருடன் பெரியநாயகி தோணியில் வீற்றிருப்பதால் தோணியப்பர் என்று பெயர். சட்டைநாதர்/வட்டுகநாதரும் இங்கு வீற்றிருக்கிறார். பிரம்மபுரீஸ்வரர் சன்னதி கீழ் தளத்தில் உள்ளது.
இக்கோயிலுடன் தொடர்புடைய 22 நீர்நிலைகள் உள்ளனவாம் . சிவனின் மூன்று வெவ்வேறு வடிவங்கள் இங்கு வழிபடப்படுகின்றன, சிவலிங்கம் (பிரம்மபுரீஸ்வரர்), நடுத்தர அளவில் உமா மகேஸ்வரரின் (தோனியப்பர்) பிரமாண்ட உருவம் மற்றும் மேல் மட்டத்தில் பைரவர் (சட்டநாதர்).
கோயில் குளத்தின் கரையில் பார்வதி உணவளித்ததாக நம்பப்படும் குழந்தை திருஞானசம்பந்தரின் புராணத்துடன் தொடர்புடையது.
அந்தக் குழந்தை பின்னர் சிவனைப் பற்றிய சைவ நியதி இலக்கியமான தேவாரத்தை இயற்றியது மற்றும் தென்னிந்தியாவில் மிகவும் மதிக்கப்படும் சைவக் கவிஞர்களில் ஒருவரானார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |