நம்முடை இந்து மதத்தில் நாடி ஜோதிடம் என்பது பல ஆண்டு காலமாக பின்பற்றி வரக்கூடிய ஒரு ஜோதிடம் ஆகும். அப்படியாக, இந்த நாடி ஜோதிடம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வைத்தீஸ்வரன்கோவிலில் மிகவும் சிறப்பு பெற்றது.
பலரும் இந்த நாடி ஜோதிடம் இங்கு தான் முதலில் தோன்றியதாக நம்புகிறார்கள். இந்த நாடி ஜோதிடம் ஆனது அடிப்படை பனை ஓலைகளில் எழுதப்பட்ட கையெழுத்தின் அடிப்படையிலேயே பார்க்கப்படுகிறது. அவ்வாறு இந்த ஓலைச்சுவடிகளில் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய தகவல்கள் உள்ளதாக நம்பப்படுகிறது.
இந்த ஜோதிடம் இன்றும் பல மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும், இந்த நாடி ஜோதிடம் ஆனது ஆண்களுக்கு வலது கை கட்டைவிரல் ரேகையும், பெண்ணாக இருந்தால் இடது கை கட்டைவிரல் ரேகையும் வைத்து பார்க்கப்படுகிறதாம்.
பிறகு அந்த ரேகையை வைத்து எடுக்கப்படும் ஓலைச்சுவடிகள் கொண்டு அந்த நபரின் வாழ்க்கையை குறிப்புகளை எடுத்து சொல்வார்கள். இந்த ஓலைச்சுவடிகள் 3000 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த சித்தர்களால் எழுதப்பட்டவை.
அதாவது அந்த காலகட்டத்தில் காகிதம் இல்லாததால் ஓலைச்சுவடிகளில் தான் கட்டிடக்கலை, வானசாஸ்திரம், நோய்களுக்கான மருந்து, நம்முடைய குறைகளுக்கான நிவர்த்தி அனைத்தும் எழுதப்பட்டிருந்தன. மேலும் இந்த ரேகைகளில் பல வகைகள் இருக்கின்றதாம்.
மணிமகுடக் கீற்று கோண ரேகை, ஒரு சுளிச் சங்குக்கோண ரேகை, சக்கரக்கோண ரேகை, கமலமணிச் சங்குக்கோண ரேகை, வரிப்பின்னல் கோண ரேகை என கிட்டத்தட்ட 108 ரேகைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும், இங்கு நாடி ஜோதிடம் பார்க்கவரும் பொது மக்களின் ரேகைகளை மை தடவி ரேகையை மை தடவி அச்சு எடுத்துக்கொண்டு பின்பு அந்த ரேகையை பூதக்கண்ணாடியில் பார்த்து அந்த ரேகைக்கான ஓலைச்சுவடியை எடுப்பார்கள்.
மேலும், நம் ரேகைக்கான ஓலைச்சுவடிகள் ஒன்று தான் இருக்கும். நமக்கான தலையெழுத்தை நம் முன்னோர்கள் முன்கூட்டியே ஓலைச்சுவடியில் எழுதி வைத்திருக்கிறார்கள். இதை பலரும் நம்புகிறார்கள் சிலர் நம்பமறுகிறார்கள்.
இருப்பினும், இந்த நாடி ஜோதிடம் நம் வாழ்க்கையை சரியாக கணித்து சொல்லி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |