இந்த கனவுகள் உங்களுக்கு அடிக்கடி வந்தா வாழ்க்கை மாறப் போகிறதாம்
கனவு என்பது நம்முடைய ஆழ்மனதின் நம்பிக்கையாக இருந்தாலும் சமயங்களில் அவை எதிர்காலத்தில் நமக்கு நடக்கக்கூடிய சில முக்கியமான விஷயங்களின் அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் அடிக்கடி ஒரு கனவு வரும்பொழுது அவை நமக்கு எதிர்மறை மற்றும் நேர்மறையான தாக்கங்களை கொடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அப்படியாக, எந்த கனவு அதிர்ஷ்டம் கொடுக்கும் எந்த கனவு வந்தால் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்ப்போம்.

1. உங்கள் கனவுகளில் தொடர்ந்து தண்ணீர் திரும்பத் திரும்ப வருகிறது என்றால் உங்கள் உணர்வுகளில் பெரிய மாற்றம் நடக்கப் போகிறது என்பதின் அர்த்தமாகும். கனவில் சுத்தமான தண்ணீர் வருவது நல்ல காலம் பிறப்பதின் அறிகுறியாகவும் அசுத்தமான தண்ணீர் எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சனையை குறிக்கக் கூடியதாக இருக்கிறது.
2. கனவுகளில் நீங்கள் உயரமான இடத்திலிருந்து கீழே விழுவது போல் வந்தால் வாழ்க்கையில் நிலையற்ற தன்மையை குறிக்கக் கூடியதாக இருக்கிறது. இவ்வாறு கனவுகள் உங்களுக்கு தொடர்ந்து வரும் பொழுது உங்களுடைய தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் திடீர் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

3. இறந்தவர்கள் உங்களுடைய கனவுகளில் அடிக்கடி வருகிறார்கள் என்றால் அது ஒரு செய்தியை உங்களிடம் அவர்கள் கொண்டுவந்து சேர்ப்பதின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. குடும்பத்தில் நடக்க இருக்க கூடிய மாற்றங்களின் வெளிப்பாடாகவும் அது கருதப்படுகிறது. அதாவது முன்னோர்கள் நம்மிடம் ஏதோ செய்தியை அறிவிப்பதற்காக கனவுகளில் வருவதாக சொல்லப்படுகிறது.
இவ்வாறான கனவுகள் தொடர்ந்து வருகிறது என்றால் நீங்கள் சற்று கவனமாகவும் எதையும் நிதானமாக வாழ வேண்டிய அவசியமாக இருக்கிறது. ஆகவே நாம் எந்த ஒரு காரியத்தையும் பதட்டம் இல்லாமல் கையாண்டு விட்டால் எல்லாம் சுமூகமாக அமைந்து விடும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |