மாணிக்கவாசகர் எதற்காக அவரை நாயுடன் ஒப்பிடுகிறார் தெரியுமா ?
சிவபெருமானுடைய அருளைப் பெற வேண்டும் என்றால் கட்டாயமாக அந்த நபர் சிவபெருமானால் முதலில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 63 நாயன்மார்களுடைய வரலாறுகளை நாம் எடுத்து படிக்கின்ற பொழுது அவர்களை எல்லோரையும் சிவபெருமான் ஏதோ ஒரு கட்டத்தில் ஆட்கொண்டு இருப்பதை நாம் பார்க்கலாம்.
அவ்வாறு சிவபெருமான் ஆட்க்கொண்டுவிட்டால் அவர் நம்மை முழுமையாக பக்தி பரவசத்தில் ஆழ்த்தி விடுவார் என்பது அல்ல. சிவபெருமான் ஒருவரை முதலில் ஆட்கொள்கிறார் என்றால் அந்த நபர் மிகப்பெரிய அளவில் துன்பத்தை சந்திக்கிறார்.
இருப்பினும் சிவபெருமானுடைய ஆனந்த கண்ணீரையும் அனுபவிக்கிறார். சிவன் என்றாலே அவன் அழுகையும் ஆனந்தத்தையும் கலந்து தருபவர். அதனால் ஒருவர் ஆழ் மனதில் சிவபெருமான் குடி கொண்ட பிறகு சில நேரங்களில் அவர் நம்மை நெருக்கடியாக நிற்கதியாக விட்டுவிடுவதும் உண்டு.
பல சிவபக்தர்கள் இந்த நேரத்தில் அழுது புரண்டு சிவபெருமானை அழைப்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது. அப்படியாக, மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணத்தில் அவர் தன்னை நாயுடன் ஒப்பிட்டு பாடுகிறார்.
இதற்கு பின்னால் இருக்கக்கூடிய பின்னணியும் சிவபெருமானுடைய அருளும் சிவபுராணத்தை பற்றிய விளக்கத்தையும் இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.