விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு முன் இதை தெரிந்து கொள்வோம்

By Sakthi Raj Sep 03, 2024 08:30 AM GMT
Report

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வருகின்ற (7.09.2024)அன்று வருகிறது.அன்றைய நாளில் வீட்டில் விநாயகருக்கு சில நைவேத்தியம் வைத்து வழிபாடு செய்வோம்.அதில் முக்கியமானதாக இடம் பெறுவது அவல் பொரி சில கனிகள் தான்.

இவை இல்லாமல் அந்த விநாயகர் சதுர்த்தி வழிபாடு முழுமையடையாது.மேலும்,அவலும் பொரியும் விநாயகருக்கு பிடித்தமான பொருள் என்றும் சாஸ்திர படி நாம் கட்டாயம் படைத்தது வழிபட வேண்டும் என்று நினைத்து வழிபட்டு கொண்டு இருக்கின்றோம்.

ஆனால் இந்த அவல் பொரி கனிகள் இவை எல்லாம் நம் வாழ்க்கையை உணர்த்தும் தத்துவம் என்று பலருக்கும் தெரிவது இல்லை.அதை பற்றி பார்ப்போம்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு முன் இதை தெரிந்து கொள்வோம் | Meaning Behind Vinayagar Chathurthi Prasatham

விநாயகருக்கு அவல் படைப்பதின் நோக்கம்

அவல் இதை நாம் அரிசியில் இருந்து தயாரிக்கின்றோம்.அந்த அவலானது உரலில் அங்கும் இங்குமாக அடிபட்டு மிகக்கடுமையாய் இடிபடும்.அரிசி எந்த அளவுக்கு இடிபடுகிறதோ அந்த அளவுக்கு சுவையான அவல் கிடைக்கும். இந்த அவள் அரிசி உரலுக்குள் இடிபடுவது போல தான் மனிதனாகப் பிறந்தவனும் பசி, பட்டினி, வறுமை, நோய் நொடி என வாழ்க்கைச் சூழலில் சிக்கி இடிபட்டுத்தான் ஆகவேண்டும்.

அதற்காக இறைவன் மீது வருத்தம் கொண்டு முடங்கிவிடக்கூடாது. இந்த துன்பங்களுக்கு காரணம் அவரவர் வினைகளே.நாம் இந்த பிறவியில் என்ன புன்னியம் பாவம் செய்கின்றமோ அடுத்தபிறவியில் இதே துன்பத்தை இன்பத்தை அனுபவிக்க வேண்டி வரும். எனவே துன்பங்களுக்கும் இன்பங்களுக்கும் காரணம் அவரவர் செய்த பாவங்களே என்று குறிப்பிடுவதே அவல் படைப்பதின் தத்துவமாகும்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு முன் இதை தெரிந்து கொள்வோம் | Meaning Behind Vinayagar Chathurthi Prasatham

விநாயகருக்கு பொரி படைப்பதன் நோக்கம்

ஆன்மீகத்தின் முக்கிய நோக்கமே ஞானம் அடைந்து பிறவாநிலை வேண்டும் என்பதே.மனிதனாக பிறந்து மீண்டும் பிறவி எடுக்கக்கூடாது என்பதற்காக தான் பொரி படைத்து வழிபாடு செய்கின்றோம்.அதாவது நெல்லை நிலத்தில் போட்டால் முளைக்கும்.

அதையே வறுத்து பொரியாக்கி நிலத்தில் போட்டால் விளையாது. நெல் போல அல்லாமல் பொரியாக மாறி விட வேண்டும் என்பதே இதனின் தத்துவம்.பொரிக்கு எப்படி வளரும் சக்தி கிடையாதோ அதுபோல் மறுபிறவி என்ற சொல்லையே மறந்துவிட்டு இறைவனுடன் ஐக்கியமாகி விட வேண்டும் என்பதே இதன் பொருள். 

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு முன் இதை தெரிந்து கொள்வோம் | Meaning Behind Vinayagar Chathurthi Prasatham

இவை தான் ஒருவர் ஞானமடைய போகிறார் என்பதற்கான அறிகுறி

இவை தான் ஒருவர் ஞானமடைய போகிறார் என்பதற்கான அறிகுறி


விநாயகருக்கு கனி படைப்பதின் காரணம்

இறைவனால் படைக்கப்பட்டது தான் இந்த உலகம்.பூமியில் உருவாக்க பட்ட எல்லாம் ஒருநாள் அந்த இறைவனை கட்டாயம் இறைவனை அடைந்து தான் ஆக வேண்டும். மனிதானாக பிறந்தவன் இந்த உலகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டுமென இறைவன் எதிர்பார்க்கிறார்.

அதாவது குறைந்தபட்சம் ஒரு அன்னதானமாவது செய் தாயா என யோசித்து பார்க்கவேண்டும்.அப்படி செய்யாமல் இருந்தால் அதை இன்றே செய்துவிடு. ஏனெனில்ஒருநாள் எனக்கு படைக்கப்பட்ட கனி போல பழுத்துவிடுவாய். பழுத்தகனி மரத்திலிருந்து உதிர்ந்துவிடும்.

அதாவது, உன் வாழ்க்கை முடிந்துவிடும்.அதற்கு முன்னதாக நீ காய் பருவத்திலேயே (வாழும்போதே) நல்லதைச் செய்துவிடு, என்பதைக் குறிப்பால் காட்டுவதற்கு ஆகும்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு முன் இதை தெரிந்து கொள்வோம் | Meaning Behind Vinayagar Chathurthi Prasatham

சிதறுகாய் உடைப்பதன் காரணம்

பொதுவாக எந்த சுப காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் விநாயகரை வேண்டி அவருக்கு ஒரு சிதறுகாய் உடைத்து தான் ஆரம்பிப்பார்கள். இது தொன்றுதொட்டு நடைபெற்று வரும் பழக்க வழக்கங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஒரு முறை, விநாயகர் யாகம் ஒன்றை மேற் கொள்வதற்காக கையில் தேங்காய்களுடன் யாக கூடத்தை நோக்கி சென்று கொண்டிருந் தார்.

அப்போது அவரது வழியில் அசுரன் ஒருவன் குறுக்கிட்டு தடை ஏற்படுத்தினான். அந்த அசுரனை அழிக்க விநாயகர், தான் கை யில் வைத்திருந்த தேங்காய்களை அசுரனை நோக்கி எறிந்தார். .தேங்காய்கள் கல்லில் பட்டு சிதறுவதைப் போல, அசுரனும் பொடிப் பொடியாகிப்போனான். இதையடுத்து விநாயகருக்கு ஏற்பட்ட தடை அகன்றது. அதன் காரணமாகத்தான் எந்த காரியத்தை தொடங்கும் முன்பும், அதற்கு தடை ஏற்படாமல் இருக்க சிதறுகாய் உடைக்கப் படுகிறது.

பண்டிகைகைகள் இவை எல்லாம் நமக்கு நம்முடைய வாழ்க்கைக்கு எதோ ஒரு வகையான பாடத்தை கற்று கொடுக்கவே என்பதை உணர்ந்து.ஒவ்வொரு பண்டிகையின் நோக்கத்தை உணர்ந்து அதை உள்வாங்கி அனைவருமாக கொண்டாடுவோம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 81100 31302
WhatsApp
bakthi@ibctamil.com
Email US