இனி பெருமாளை இந்த பெயரை சொல்லி வழிபாடு செய்யுங்கள்

By Sakthi Raj Aug 31, 2024 04:30 PM GMT
Report

 கடவுளுக்கு பல பெயர்கள் உண்டு.மேலும் பொதுவாக பக்தியில் திளைத்து நாம் வேண்டி கொள்ளும் பொழுது அவர்களுடைய பெயர்களை சொல்லி வணங்குவதுண்டு.

அதிலும் பெருமாளுக்கு பல பெயர்கள் இருக்கிறது.அவரை வணங்கும் பொழுது பெருமாளே,கண்ணா,மதுசூதனா என்றெல்லாம் பக்தியில் மூழ்கி நாம் வழிபாடு செய்வோம்.இந்த பெயர்கள் எல்லாம் கோயில் வழியாகவும் புத்தங்களை வாயிலாகவும் நாம் அறிந்து கொண்டு வழிபாடு செய்வது.

ஆனால் பெருமாள் நாம் சொல்லும் ஒவ்வொரு நாமத்திற்கு ஒவ்வொரு அர்த்தம் நிறைந்து இருக்கிறது.அந்த அர்த்தம் மிக அழமானதாகவும் நம்மை வியப்பில் ஆழ்த்தக்கூடியதவாகவும் இருக்கிறது.அதை பற்றி பார்ப்போம்.

இனி பெருமாளை இந்த பெயரை சொல்லி வழிபாடு செய்யுங்கள் | Meaning Of The Name Lord Krishna

ஹரி - இயற்கையின் அதிபதி

கேசவன் - அளவிட முடியாதவன்

 ஸ்ரீதரன் - லட்சுமியை மார்பில் கொண்டவன் 

வாசுதேவன் - உயிர்கள் அனைத்திலும் வசிப்பவன்

விஷ்ணு - எங்கும் பரந்திருக்கும் இயல்பினன்

 மாதவன் - பெரும் தவம் செய்பவன்

 மதுசூதனன் - மது என்னும் அசுரனைக் கொன்றவன்

புண்டரீகாட்சன் - தாமரை போன்ற கண்களை உடையவன்

ஜனார்த்தனன் - தீயவர்களின் இதயத்தில் அச்சத்தை விளைவிப்பவன்

 சாத்வதன் - சாத்வ குணத்தை விட்டு விலகாதவன்

விருபாட்சணன் - வேதங்கள், அவனைக் காண்பதற்கான கண்கள்ஃ என்பதால் இப்பெயர் வந்தது.

உண்மையான ஆன்மிகம் என்றால் என்ன?

உண்மையான ஆன்மிகம் என்றால் என்ன?


நாராயணன் - மனிதர்களின் புகலிடமாக இருப்பவன்

புருசோத்தமன் - ஆண்களில் மேன்மையானவன்

அனந்தன் - அழிவில்லாதவன்

கோவிந்தன் - பசுக்களின் தலைவன், கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவன்

பத்மநாபன் - தொப்புளில் தாமரை மலரைக் கொண்டவன்

 அச்சுதன் - எந்த ஒரு காரியத்திலும் இருந்து நழுவ நினைக்காதவர்

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US