மீனாட்சி அம்பாளின் திருக்கல்யாணத்தை காண வேண்டுமா? அனுமதி சீட்டு முன்பதிவு தொடக்கம்

By Kirthiga Apr 09, 2024 07:30 AM GMT
Report

உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 12 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

சித்திரை திருவிழா ஆரம்பம்

வருகிற 12 ஆம் திகதி காலை 9.55 மணிக்கு மேல் 10.19 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றப்படவுள்ளது.  

மீனாட்சி மற்றும் சுந்தரேசுவரர் காலை இரவு நேரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதியில் வலம் வருவார்.

ஏப்ரல் 19 ஆம் திகதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகமும் 20 ஆம் திகதி விஜயமும் நடைபெறுகிறது.

21 ஆம் திகதி திருக்கல்யாணம் நிகழவிருக்கிறது. காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் மேற்கு, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் திருக்கல்யாணம் நடைபெறும்.

அனுமதிச் சீட்டு முன்பதிவு

திருக்கல்யாணத்தை காண் விரும்பும் பக்தர்கள் maduraimeenakshi.hree.tn.gov.in என்ற கோயில் இணையத்தளத்தின் வாயிழாகவும் இந்து சமய அறநிலையத்துறையத் துறை hrce.tn.gov.in வாயிழாகவும் அனுமதிச் சீட்டை முன்பதிவு செய்துக்கொள்ள முடியும்.

மீனாட்சி அம்பாளின் திருக்கல்யாணத்தை காண வேண்டுமா? அனுமதி சீட்டு முன்பதிவு தொடக்கம் | Meenakshi Thirukalyanam Ticket Online Booking

இன்று (09) முதல் வருகிற 13 ஆம் திகதி இரவு 9 மணிக்குள் அனுமதி சீட்டை முன்பதிவு செய்துக்கொள்ள முடியும்.

ரூ. 200, ரூ. 500 சீட்டு வைத்திருப்பவர்கள் வடக்கு கோபுர வழியாகவும், கட்டணமில்லாமல் தரிசனம் செய்ய நினைப்பவர்கள் தெற்கு கோபுர வழியாகவும் அனுமதிக்கப்படுவார்கள். மொத்தமாக சுமார் 12 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கப்படவுள்ளனர்.

ஒருவர் 2 ரூ.500 கட்டண சீட்டு மட்டுமே பெற முடியும். ரூ.200 டிக்கெட்டை ஒருவர் 3 பெறலாம். ஒரே நபர் ரூ.500, ரூ.200 சீட்டுகளை பெற முடியாது.

கோவிலின் மேற்கு சித்திரை வீதி பிர்லா விஷ்ரம் தங்கும் இடத்தில் ரூ.500, ரூ.200 சீட்டு முன்பதிவு திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உலக பிரசித்த பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா- முழு தகவல்கள்

உலக பிரசித்த பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா- முழு தகவல்கள்


முன்பதிவு செய்ய வருபவர்கள் கட்டாயம் ஆதார் நகல், போட்டோவுடன் கூடிய அடையாளச் சான்று, தொலைப்பேசி எண், Email ஆகியவற்றை ஒப்படைக்க வேண்டும்.

அனுமதி சீட்டு உறுதிசெய்யப்பட்டால், கோவிலின் மேற்கு சித்திரை வீதி பிர்லா விஷ்ரம் தங்கும் இடத்தில் பணத்தை கொடுத்து அனுமதி சீட்டை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் அனுமதி சீட்டு பெற்றவர்கள் காலை 7 மணிக்கு கோயிலுக்கு சென்று அவர்களுடைய இடத்தில் அமர்ந்து பூஜையில் கலந்துக்கொள்ளலாம் என கோவில் நிர்வாகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் 
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US