200 வருடங்களாக ஸ்ரீ பொங்களாயி அம்மன் கோவிலுக்கு செல்லாத பெண்கள் - ஏன் தெரியுமா?
நாமக்கல் மாவட்டத்தின் மலையாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பொங்களாயி அம்மன் கோவிலுக்கு 200 வருட காலமாக ஆண்கள் மட்டுமே பூஜை செய்து வருவதாக கூறப்படுகிறது.
ஆண்கள் மட்டுமே வழிப்படும் அம்மன் கோயில்
கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் திருவிழா நேரத்தில் மலை மீது இருந்து ஒரு கர்ப்பினி பெண் இறங்கி கிராமத்திற்குள் நுழைந்துள்ளார்.
கிராமத்தில் உள்ள பெண்களிடம் தாகமாக இருக்கிறது. தண்ணீர் தர முடியுமா என்று கேட்டுள்ளார். ஆனால் அக்கிராமத்தில் உள்ள பெண்கள் தண்ணீர் தர மறுத்துள்ளனர்.
காரணம், மழை காலத்தில் மலையில் இருந்து இறங்கி வந்து இப்படி ஒரு பெண் தண்ணீர் கேட்பது விநோதமாக இருந்துள்ளதாகவும் காட்டேரி வந்துள்ளதாகவும் எண்ணி பயந்துள்ளனர்.
பின் தண்ணீர் தாகத்தில் இருந்த அப்பெண் அதே இடத்தில் உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்த நாளில் இருந்து, அக்கிராமத்தில் வசிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் கடும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.
இதற்கு தீர்வு காணும் விதமாக அனைவரும் அப்பெண் உயிரிழந்த இடத்திற்கு சென்று வழிப்பட்டுள்ளார். அப்போது கூட்டத்தில் இருந்த ஓர் பெண் மீது சாமி இறங்கி அருள் வாக்கு கூறியதாக கூறப்படுகிறது.
அதன்போது, நான் உங்களது ஊரை காப்பாற்றுக்கின்றேன். எனக்கு ஒவ்வொரு வருடமும் கிடா வெட்டி பொங்கல் வைத்து திருவிழா நடத்த வேண்டும். இதை ஆண்கள் மட்டுமே செய்ய வேண்டும்.
எனக்கு உதவி செய்யாத எந்தவொரு பெண்ணும் இந்த பூஜையில் கலந்துக்கொள்ளக் கூடாது என கூறியுள்ளார். எனவே அன்றைய காலத்தில் இருந்து இன்று வரையில் இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் அனைத்து ஆண்களும் கலந்துக்கொண்டு திருவிழா நடத்துவர்.
குறித்த திருவிழாவை நடத்துவதற்காக சென்னை,கரூர் ,திருச்சி, தர்மபுரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 5000க்கும் மேற்பட்ட ஆண்கள் வருகை தருவதாகவும் கூறப்படுகிறது.
இரவு கிடாக்களை சுவாமிக்கு முன் பூஜை செய்து பலி கொடுக்கப்பட்டு பின்னர் வெட்டப்பட்ட கிடாக்களை அங்கே இரவு முழுவதும் சமைத்து அதிகாலையில் ஆண்கள் மட்டுமே சமபந்தி விருந்தில் கலந்துக்கொள்வதாக கூறப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |