இன்று முதல் அள்ளிக்கொடுக்க காத்திருக்கும் புதன்! ராஜயோகம்
ஆகஸ்ட் 11ம் திகதி கடகத்தில் நேரடியாக புதன் இருப்பதால் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது.
புதனின் இந்த பெயர்ச்சியால் வீட்டில் சந்தோஷமான சூழல், எளிதில் முடிவெடுக்கும் திறன், எதிர்பாராத லாபம் என சிறப்பான வாழ்க்கை அமையப்போகிறது.
மேலும் சில வாரங்களாக நீடித்த மனக்குழப்பங்களில் இருந்து தீர்வு கிடைக்கப்போகிறது.
மேஷம்
புதனின் நேரடிப் பார்வையால் குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மேம்படும், வீட்டில் சண்டை சச்சரவுகள் நீங்கி, குடும்பத்துடன் தெளிவான முடிவெடுத்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து செல்வீர்கள், தொழிலில் முன்னேற்றம் உண்டு, முதலீடுகள் மூலம் லாபம் அதிகரிக்கும்.
மிதுனம்
நீங்களாகவே மாற்றத்தை உணரும் நேரம் இதுவாகும், குழப்பங்கள் நீங்கி தொழில் ரீதியாக தெளிவான முடிவை எடுப்பீர்கள், லாபம் ஈட்டும் வகையில் முதலீடுகளை செய்வீர்கள், பழைய கடன் பிரச்சனைகள் நீங்கி தன்னம்பிக்கை அதிகரிக்கும், வெளிநாட்டு தொடர்புகள் நம்பிக்கையை கொடுக்கும்.
சிம்மம்
உங்களுக்கு புகழையும், அங்கீகாரத்தையும் தேடித்தரும் தருணம் இதுவாகும், ஆன்மீக ரீதியாக காரியங்களில் அதிகம் ஈடுபாடு காட்டுவீர்கள், பழைய நினைவுகளை அசைப்போட்டுக் கொண்டே இருப்பீர்கள், குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
கும்பம்
புதனின் பார்வையில் உங்கள் தினசரி வாழ்வில் மாற்றங்கள் நிகழலாம், வேலையிடங்களில் மரியாதை அதிகரிக்கும், தொழில் ரீதியாக தெளிவான முடிவை எடுப்பீர்கள், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளிடம் இருந்து உதவி கிடைக்கப்பெறும்.







