சஷ்டியில் விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது உண்மையா?
கலியுக வரதனாக போற்றப்படும் முருகப் பெருமான் பக்தர்களின் துயர் துடைப்பவராக இருக்கிறார். அப்படியாக முருகப்பெருமானுக்கு பல்வேறு விரதங்கள் இருந்தாலும் அவருடைய மகாகந்த சஷ்டி விரதம் ஆனது மிகவும் சக்தி வாய்ந்த விரதமாக இருந்து வருகிறது. இந்த மகா கந்தசஷ்டி விரதத்தை பல பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.
அப்படியாக இந்த மகா கந்த சஷ்டிக்கு ஒரு பழமொழியும் உண்டு. அது காலப்போக்கில் "சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்" என்று மாறிவிட்டது. ஆனால் உண்மையான பழமொழி என்னவென்றால் சஷ்டி திதியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பதே ஆகும்.
அவ்வாறாக உண்மையில் சஷ்டி விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்குமா என்ற சந்தேகங்கள் பலருக்கும் இருக்கும். அதைப் பற்றி பார்ப்போம்.
இந்த உலகத்தில் கிடைக்கும் பாக்கியம் அனைத்துமே இறைவன் அருளால் என்பது எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.
அப்படியாக திருமணமாகி பலருக்கும் குழந்தை பாக்கியம் என்பது ஒரு கனவாகவும் ஒரு ஏக்கமாகவும் மாறிவிடுகிறது. எத்தனையோ மருத்துவமனைகள் ஏறி இறங்கினாலும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கைகூடுவது இல்லை. இவர்கள் பல ஜோதிடர்களை சந்திப்பார்கள், பல ஆலோசனை பெறுவார்கள்.
அவ்வாறு செய்வது அறியாது இருப்பவர்கள் சரண் அடைய வேண்டியவர் முருகப்பெருமானை மட்டும் தான். நம்முடைய தலைவிதையை மாற்றி எழுதக்கூடிய அனைத்து வல்லமை பெற்றவர் முருகப்பெருமான். இவரை நம்பி சரண் அடைந்து விட்டால் பிறகு அவர் நடத்தக்கூடிய அதிசியங்கள் நாம் உணர்ந்து பக்தியில் திளைக்கலாம்.
அப்படியாக கணவன் மனைவி இருவரும் குழந்தை இல்லை என்று கவலை கொள்ளாமல் இந்த பிரபஞ்சத்தில் நம்பிக்கை வைத்து ஒரு விஷயத்தை செய்தால்நடக்காமல் போகாது என்று கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும்.
இந்த மகா கந்தசஷ்டி விரத நாளில் முழு நம்பிக்கையோடு துளி அளவும் சந்தேகமில்லாமல் முருகப்பெருமானை மனதில் நிறுத்தி பூஜைகளும் வழிபாடுகளும் செய்து முருகப்பெருமானுக்குரிய திருப்புகழைப் பாராயணம் செய்து தவமிருந்து இந்த விரதத்தை கணவன் மனைவி இருவருமாக மேற்கொண்டால் பிறகு நடக்கும் அதிசயத்தை அவர்கள் பார்ப்பது மட்டும்தான் மிச்சமாக இருக்கும்.
இந்த மகா கந்த சஷ்டி விரதம் இருந்து குழந்தை வரம் பெற்றவர்கள் ஏராளம். அதற்கு சான்றாக நம்மை சுற்றி உள்ள உற்றார் உறவினர்களையே நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆக, விரதம் இருந்தேன். ஆனால் பலன் கிடைக்கவில்லை என்று சொல்லும் அளவிற்கு சந்தேகிக்காமல் நான் விரதமிருந்தேன் எனக்கு முருகப்பெருமான் அருள் வழங்கினார் என்று சொல்லும் அளவிற்கு நம்பிக்கையோடு தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று கணவன் மனைவி இருவருமாக சேர்ந்து இருக்கையில் இந்த பிரபஞ்சம் அவர்கள் கேட்ட வரத்தை தர மறுப்பதில்லை.
ஆக எந்த விரதம் இருக்க வேண்டும் என்றாலும் முதலில் நம்பிக்கை என்பது அவசியமாகும். ஆக நம்பிக்கை தான் நம்முடைய வரமாக மாறுகிறது. நம்பிக்கையோடு முருகப்பெருமானை சரணடைவோம். அவர் கொடுக்கக்கூடிய அருளை நாம் பெற்று மனமகிழ்ச்சி அடைவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







