முகம் பார்க்கும் கண்ணாடியை வீட்டில் எங்கு வைக்க வேண்டும்?
வீடுகளில் கண்ணாடி என்பது இன்றியமையாத ஒரு பொருளே, அழகுக்காக மட்டுமின்றி வாஸ்து சாஸ்திரங்களின் படி கண்ணாடியை வைத்திருப்பது அவசியம்.
ஒரு சிறு தவறு கூட வீட்டின் மகிழ்ச்சியை நிம்மதியை சீர்குலைத்துவிடக்கூடாது, எனவே இந்த பதிவில் வாஸ்துபடி கண்ணாடியை எந்த திசையில், எப்படி வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
ஒரு சில விடயங்களை நாம் சரிவர பின்பற்றினாலே நமது உழைப்பு வீணாகாமல் குடும்பத்தில் மகிழ்ச்சி குடிகொள்ளும்.
உங்கள் வீட்டின் சக்தியை மாற்றும் தன்மை கண்ணாடிக்கு உண்டு, இதில் நீங்கள் தவறு செய்தால் எதிர்மறை ஆற்றல்களை கொண்டு வரும்.
வீட்டின் பூஜை அறையில் கண்ணாடியை வைக்கலாம், கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு திசைகளில் கண்ணாடியை மாட்டலாம்.
குளியலறையாக இருந்தால் கிழக்கு மற்றும் வடக்கு திசை நோக்கி கண்ணாடியை மாட்டலாம்.
படுக்கையறையில் கண்ணாடி வைப்பதை தவிர்ப்பது நல்லது, ஒருவேளை கண்டிப்பாக தேவை எனும் பட்சத்தில் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி இல்லாமல் இருக்க வேண்டும், படுத்திருக்கும் போது உங்கள் பிம்பம் கண்ணாடியில் பிரதிபலிக்கக்கூடாது.
படுக்கையறையில் வைப்பதால் கணவன்- மனைவி இடையே சுமூகமாக உறவு இருக்காது என கூறப்படுகிறது.
தரையிலிருந்து சுமார் 4 முதல் 5 அடி உயரத்தில் கண்ணாடியை வைப்பது நல்லது, கண்ணாடியை எப்போதும் சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
உடைந்த கண்ணாடிகளை அகற்றி விடுவது நல்லது, ஏனெனில் இது கெட்ட சக்திகளை ஈர்க்கும் தன்மை கொண்டது.
இதேபோன்று வீட்டின் வாசலில் கண்ணாடியை வைக்கக்கூடாது, வாசலில் வைத்தால் கண்ணாடியை பார்த்துவிட்டு வருவது போல் இருக்கும், நிச்சயம் இது தவறான ஒன்றாகும், செல்வம் சேராமல் போவதற்கு இதுகூட காரணமாக இருக்கலாம்.
குறிப்பாக குழந்தைகள் படிக்கும இடத்தில் கண்ணாடி வைப்பதை தவிர்க்கவும்.
பெரும்பாலும் செவ்வக வடிவ கண்ணாடிகளை தெரிவு செய்திடுங்கள், ஓவல் வடிவம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்ட கண்ணாடிகளை தவிர்க்கவும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |