ஆன்மீகம்: வீடுகளில் பூஜை செய்யும் பொழுது இந்த தவறை செய்து விடாதீர்கள்

By Sakthi Raj Jun 03, 2026 10:11 AM GMT
Report

வீடுகளில் பூஜை வழிபாடுகளின் பொழுது நாம் தெரியாமல் சில தவறுகள் செய்வது இயல்பு. அதனை நாம் திருத்திக் கொண்டு சரியான முறையில் பூஜை செய்வது அவசியம். அப்படியாக, ஆன்மீக ரீதியாக வீடுகளில் பூஜை செய்யும் பொழுது சில விஷயங்களை தவறியும் செய்து விடக்கூடாது என்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

1.வீடுகளில் எப்பொழுதும் 24 மணி நேரமும் விளக்கை எரிய விடக்கூடாது.

2. வீடுகளில் திருமணம் முடிந்த பிறகு குலதெய்வம் ஆலயத்திற்கு சென்று பொங்கல் வைத்து வழிபாடு செய்த பிறகு வீட்டில்போடப்பட்ட பந்தலை பிரிக்க வேண்டும்.

3. வீடுகளில் உள்ள பூஜை அறையை எந்த நேரமும் திறந்த நிலையில் இருக்கக் கூடாது.

4. திருமணத்திற்காக வீடுகளில் பந்தல் கால் ஊன்றிய பிறகு எக்காரணத்திற்கு கொண்டும் மாப்பிள்ளை அவசியம் இல்லாமல் வெளியே செல்லுதல் கூடாது.

5. முனீஸ்வரர் ஆலயம் சென்று வழிபாடு செய்யும்பொழுது தேங்காய் உடைத்து வழிபாடு முடித்த பிறகு திரும்பி பார்க்கக் கூடாது.

ஆன்மீகம்: வீடுகளில் பூஜை செய்யும் பொழுது இந்த தவறை செய்து விடாதீர்கள் | Mistakes Should Not Do While Doing Pooja At Home

உண்மையான பக்தி எப்பேர்ப்பட்ட தோஷத்தையும் வெல்லுமாம்.. எப்படி தெரியுமா?

உண்மையான பக்தி எப்பேர்ப்பட்ட தோஷத்தையும் வெல்லுமாம்.. எப்படி தெரியுமா?

6. வீடுகளில் சுவாமிக்கு படைக்க கூடிய நெய்வேத்தியம் 20 நிமிடங்களுக்கு மேல் அப்படியே வைத்திருக்கக் கூடாது. அதை நாம் உடனடியாக பிரசாதமாக எடுத்து சாப்பிட்டு மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும்.

7. பூஜை அறையில் ஒருபொழுதும் உடைந்த சிலைகள் பழைய மற்றும் காய்ந்த பூக்களை வைக்க கூடாது. அதை தினமும் சுத்தப்படுத்துவது அவசியமாகும்.

8. வீடுகளில் வாரத்திற்கு ஒருமுறையாவது சாம்பிராணி தூபம் அல்லது நல்ல நறுமணம் கொண்ட ஊதுபத்தி ஏற்றுவது அவசியம். இதனால் கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை தாக்கங்கள் குறையும்.

9. வீடுகளில் தினமும் ஒரு நேரமாவது விஷ்ணு சகஸ்ர நாமம், கந்த சஷ்டி கவசம் அஷ்டலட்சுமி பாடல்களை ஒலிக்கச் செய்வது செல்வ வளர்ச்சி பெறும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US