கோவிலுக்கு சென்று இந்த 8 தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்
நாம் ஆலய வழிபாடு செய்யும்பொழுது ஒரு சில தவறுகளை தெரியாமல் செய்வது இயல்பு என்றாலும் அதை நாம் திருத்திக் கொள்வதுதான் நம்முடைய ஆலய வழிபாட்டை அவை முழுமை அடைய செய்கிறது. அப்படியாக, கோவிலுக்கு செல்லும் பொழுது நாம் செய்யக்கூடாத தவறுகளை பற்றி பார்ப்போம்.
1.கோவிலில் நாம் கொடிமரம் நந்தி பலிபீடம் ஆகியவற்றின் நிழல்களை மிதித்து வழிபாடு செய்ய கூடாது.
2. அதேபோல், விளக்கு இல்லாமல் அவை எரியாத நேரத்தில் நாம் அதை வணங்க கூடாது.
3. ஆலயத்தில் அபிஷேகம் நடந்து கொண்டிருக்கும் பொழுது சுற்றிவர கூடாது.
4. கோவிலில் நந்தி மற்றும் மற்ற மூர்த்திகளையும் நாம் தொட்டு வணங்குதல் கூடாது.

5. அதை போல் கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டக் கூடாது.
6. கோவிலில் மனிதர்களுடைய காலில் விழுந்து வணங்குவதை தவிர்க்க வேண்டும்.
7.கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய பிறகு உடனடியாக கை கால்களை கழுவுவது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
8. சிவன் கோவில் சென்றால் கட்டாயமாக அங்கு சிறிது நேரம் அமர்ந்து விட்டு வர வேண்டும். பெருமாள் கோவில் சென்றால் அங்கு அமரக்கூடாது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |