ஜோதிடம் திருமணத்தில் தவறியும் இந்த தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்

By Sakthi Raj Oct 25, 2026 12:27 PM GMT
Report

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்வார்கள். அந்த வகையில் , ஜோதிட ரீதியாக திருமணத்தின் பொழுது நாம் ஒரு சில தவறுகளை மட்டும் செய்து விடக்கூடாது என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

திருமணத்தின் பொழுது மணமகன் மணமகளை சுண்டு விரல்களை பிடித்து மணமேடையை சுற்றி வருவது என்பது அவர்களுக்கு இடையே இருக்கக்கூடிய ஒரு ஒற்றுமையை குறிக்கிறது. ஆதலால், அந்த மனமேடை பெரும்பாலும் மரத்தினால் அமைக்கப்படுவது சிறப்பானதாக இருக்கும். மரம் மகாலட்சுமி அம்சமாக கருதப்படுகிறது.

இது தம்பதியினருடைய ஒரு மங்களத்தையும் இறைவனுடைய மறைமுக ஆசீர்வாதத்தை பெற்றுக் கொடுக்கிறது.

எதிர்காலத்தில் நடக்கக்கூடிய விஷயங்களை முன்னதாகவே அறியக்கூடிய சக்திகொண்ட ராசிகள்

எதிர்காலத்தில் நடக்கக்கூடிய விஷயங்களை முன்னதாகவே அறியக்கூடிய சக்திகொண்ட ராசிகள்

அதைப் போல் திருமணத்திற்கு பிறகு மணமக்கள் மோதிரத்தை நீரில் தேடுகின்ற ஒரு சடங்கு நடக்கிறது. அவர்கள் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்லக்கூடிய தன்மையையும் குடும்பத்தை வழிநடத்தக்கூடிய திறனையும் வெளிப்படுத்தக்கூடிய ஒரு குறியீடாக இருக்கிறது.

மேலும். திருமணத்தில் கணவன் மற்றும் மனைவி இருவருமே கால்களில் மெட்டி அணிவது என்பது அவர்களுடைய மண வாழ்க்கையை வெளிப்படுத்தும் ஒரு அடையாளமாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது.

இந்த சடங்கு அவர்களிடையே ஒரு ஒற்றுமையை வெளிப்படுத்தும். மேலும், திருமணத்தின் பொழுது அக்னியை சுற்றி வருவது, இறைவனை சாட்சியாக வைத்து திருமணம் நடைபெறுவதை குறிக்கிறது. அதேபோல், பெண்கள் திருமணத்தின் பொழுது தங்க சங்கிலி அணிந்திருந்தாலும் தாலியில் ஒரு சிறிய பகுதியாவது அவர்கள் மஞ்சள் கயிற்றினால் கட்டப்பட்டிருக்க வேண்டும்.

இது தம்பதிகள் இடையே இருக்கக்கூடிய ஒரு பிணப்பை பலப்படுத்தி தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கவும் உதவுகிறது. மேலும், ஜோதிட ரீதியாக திருமணத்தின் பொழுது நாம் தவறியும் எந்த விஷயங்களை செய்யக்கூடாது என்பதை பற்றி இந்த காணொளியைப் பார்த்து தெரிந்து கொள்வோம்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US