சீட்டு எழுதி மரத்தில் கட்டினால் 30 நாட்களில் வேண்டுதலை நிறைவேற்றும் கருப்புசாமி

By Sakthi Raj May 27, 2026 04:36 AM GMT
Report

 காவல் தெய்வமான கருப்பசாமி கிராமங்களில் எல்லையை காக்கும் தெய்வமாகவும் பலரின் குலதெய்வமாகவும் இருந்து மக்களை காத்து வருகிறார். அப்படியாக, கருப்பசாமி வழிபாடுகளில் சக்தி வாய்ந்த வழிபாடாக கஷ்டங்கள் தீர அதை ஒரு சீட்டில் எழுதி மரத்தில் கட்டினால் அது உடனடியாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

இப்பொழுது இந்த வேண்டுதல் நிறைவேற்றக்கூடிய ஆலயம் எங்கு இருக்கிறது என்பதை பற்றி பார்ப்போம். பொதுவாக, கோவிலுக்கு செல்லும் பொழுது மரங்களில் தொட்டில் கட்டி இருப்பதை பார்த்திருப்போம்.

அதாவது குழந்தை வரம் வேண்டி அவர்களுடைய வேண்டுதலாக மரத்தில் தொட்டில் கட்டி வைத்திருப்பார்கள். பலருக்கும் அந்த வேண்டுதல் நிறைவேறி இருக்கிறது என்பதையும் நான் கேள்விப்பட்டிருக்கின்றோம்.

அந்த வகையில் 30 நாளில் சீட்டில் எழுதி வைத்து மரத்தில் கட்டினால் அந்த வேண்டுதல் நிறைவேறுகிறது என்ற ஒரு உண்மை நம்மை அதிசயத்தில் ஆழ்த்துகிறது.

சீட்டு எழுதி மரத்தில் கட்டினால் 30 நாட்களில் வேண்டுதலை நிறைவேற்றும் கருப்புசாமி | Mohanur Navaladi Karuppasamy Worship And History

இந்த 3 ராசியில் பிறந்தவர்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பது கஷ்டமாம்

இந்த 3 ராசியில் பிறந்தவர்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பது கஷ்டமாம்

கோவில் எங்குள்ளது?

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இந்த கருப்பசாமி கோயில் அமைந்திருக்கிறது. இங்கு அருள்பாலிக்கும் கருப்பசுவாமியை நாவலடி கருப்பசாமி அல்லது நாவலடியான் கோவில் என பக்தர்கள் அழைத்து வருகின்றனர்.

இக்கோயில் சுமார் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமையான கோவிலாக விளங்குகிறது. நாவல் மரத்திற்கு அடியில் சுயம்பு மூர்த்தியாக கருப்பசாமி பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார்.

சீட்டு எழுதி வேண்டுதல் :

சமயங்களில் வாழ்க்கை என்பது பல ஏமாற்றங்களும் துரோகங்களும் நிறைந்ததாக இருக்கிறது. இருப்பினும் அதிலிருந்து நாம் விடுவிப்பதற்கு இறைவனை நாடுவது மட்டுமே வழியாக அமைகிறது.

அந்த வகையில் சொத்து பணம் போன்றவையை யாரேனும் ஏமாற்றி விட்டார்கள் என்றால் கவலை கொள்ளாமல் நபர் இந்த ஆலயத்திற்கு வந்து ஒரு காகிதத்தில் யார் அவர்களை ஏமாற்றினார்கள் என்ன நடந்தது என்பதை விவரமாக எழுதுகிறார்கள். பிறகு கருப்பசாமி சன்னதிக்கு எதிரே இருக்கக்கூடிய பழங்கால நாவல் மரத்தில் பக்தர்கள் கட்டி விடுகிறார்கள்.

சீட்டு எழுதி மரத்தில் கட்டினால் 30 நாட்களில் வேண்டுதலை நிறைவேற்றும் கருப்புசாமி | Mohanur Navaladi Karuppasamy Worship And History

2026 குருபெயர்ச்சி: இப்படி வழிபாடு செய்தால் குருபகவானின் முழு அருள் கிடைக்குமாம்

2026 குருபெயர்ச்சி: இப்படி வழிபாடு செய்தால் குருபகவானின் முழு அருள் கிடைக்குமாம்

இவ்வாறு நாம் வேண்டுதலை எழுதி கட்டி விட்டால் அடுத்த 30 நாட்களில் அவர்களின் பிரச்சனை முடிவிற்கு வந்து விடுகிறது என்று பலரும் சொல்கிறார்கள். அதாவது யார் ஏமாற்றினார்களோ அந்த நபர்களுக்கு விரைவில் தக்க தண்டனையை இந்த கருப்பசாமி கொடுக்கிறார் என்பதை பல பக்தர்கள் நிஜத்தின் வாயிலாக நமக்கு சொல்கிறார்கள்.

ஆதலால், இனி வாழ்க்கையில் தேவை இல்லாத ஏமாற்றம், துரோகம் சந்தித்துக் கொண்டு இருந்தால் நாவலடி கருப்பசாமி ஆலயம் வந்து உங்கள் வேண்டுதலை சீட்டில் எழுதி பிரார்த்தனை செய்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு நீதி வாங்கி கொடுப்பார்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US