இந்த ராசியில் பிறந்த மாமியார்களுக்கு மருமகளை பார்த்தாலே பிடிக்காதாம்
ஒரு குடும்பம் என்பது நல்ல நிலையில் அமைவதற்கு கட்டாயம் ஒரு பெண்ணினுடைய பங்கு அதிகம் இருக்கிறது. அந்த வகையில் ஒரு பெண் என்பவள் ஒரு வீட்டில் மகளாக பிறந்து வேறொரு வீட்டிற்கு சென்று மருமகளாக மாறுகிறார். அந்த வகையில் எல்லா மருமகளுக்கும் திருமணத்திற்கு பிறகு மகன் பிறந்தால் அவர்கள் ஒரு மாமியாராக மாறக்கூடிய நிலை வருகிறது.
ஆனால் காலம் காலமாக குடும்பங்களில் இந்த மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே ஆன புரிதல் என்பது ஒரு மிகப்பெரிய விரிசல் ஆகவே இருப்பதை நாம் பார்க்கலாம். ஒரு சில இடங்களில் மட்டுமே மாமியாருக்கும் மருமகளுக்கும் நல்ல ஒரு ஒற்றுமையான பந்தம் இருக்கிறது.
இதற்கு சில நேரங்களில் அவர்களுடைய ராசி அமைப்புகளும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. அந்த வகையில் ஒரு சில ராசியில் பிறந்த மாமியார்களுக்கு அவர்களுடைய மருமகளை பார்த்தாலே பிடிக்காதாம்? எப்பொழுதும் ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருப்பார்களாம். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

கடகம்:
சந்திர பகவானுடைய ஆதிக்கத்தை பெற்ற கடக ராசியில் பிறந்த பெண்கள் எப்பொழுதும் ஏதேனும் யோசித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களை சுற்றி உள்ளவர்கள் மீது அவர்களுடைய அக்கறை சில நேரங்களில் ஒரு வெறுப்பை கொடுத்து விடக்கூடிய நிலை இருக்கிறது. அப்படியாக, கடக ராசியில் பிறந்த பெண்கள் மாமியார் ஆக மாறும் பொழுது அவர்கள் தங்களுடைய மருமகள் மீது இருக்கக்கூடிய அக்கறையினால் எதையாவது அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்க, இதனை அந்த மருமகள் புரிந்து கொள்ளாத நிலையில் மாமியாருக்கும் மருமகளுக்கும் அடிக்கடி சண்டை வந்து விடுமாம்.
விருச்சிகம்:
செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தை கொண்ட விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் எப்பொழுதும் தங்களை சுற்றி உள்ளவர்களை பாதுகாப்பான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணக்கூடியவர்கள். ஆதலால் அவர்களுக்கு ஒரு மருமகள் வரும் பொழுது அவர்களை எப்பொழுதும் தங்கள் கண் முன்னிலையில் வைத்துக்கொண்டு பாதுகாப்பான நிலையிலும் ஒரு நல்ல வாழ்க்கை முறையை அவர்கள் வாழ வேண்டும் என்ற ஒரு எண்ணம் வைத்திருப்பார்கள். இது சில நேரங்களில் அதிகமாகும் பொழுது இவர்களுடைய மருமகள் தங்களுடைய மாமியார் ஒரு ஆதிக்கத்தை செலுத்துகிறார் என்ற ஒரு வெறுப்பு நிலையில் இவர்களுக்கு இடையில் சண்டை வருவதை நாம் காணலாம்.
மீனம்:
குருபகவானின் ஆதிக்கத்தைக் கொண்ட மீன ராசியில் பிறந்த பெண்கள் ஒருவரை வழிநடத்துவதில் ஒரு சிறந்த ஆசிரியர். அந்த வகையில் தங்களுக்கு ஒரு மருமகள் வருகிறார் என்றால் அவர்களுக்கு தங்கள் வாழ்க்கையில் கற்றுத் தெளிந்த அனைத்து விஷயங்களும் கற்றுக் கொடுத்து அவர்களை ஒரு உயர்வு நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஒரு ஆசிரியரைப் போல் இவர்கள் மருமகளிடம் நடந்து கொள்வார்கள். ஆனால் மருமகள் இவர்களுடைய இந்த ஒரு கண்டிப்பான நிலையை பார்த்து எப்பொழுதும் கோபமாக நடந்து கொள்கிறார்கள் என்று புரிந்து கொள்ளாத நிலையில் இருப்பதால் மாமியாருக்கும் மருமகளுக்கும் அடிக்கடி சண்டை வருவதை நாம் காணலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |