முப்பத்து முக்கோடி தேவர்கள் யார்?

By Sakthi Raj Jun 06, 2024 11:00 AM GMT
Report

நம் இந்து சமயத்தில் புராணங்களில் முப்பத்தி முக்கோடி தேவர்கள் என்று கேள்வி பட்டு இருப்போம்.

தெய்வங்களுடைய திருமணங்களில் முப்பத்தி முக்கோடி தேவர்கள் வந்து கலந்துக்கொண்டார்கள் என்று படித்திருப்போம்.ஆனால் பலருக்கும் அந்த முப்பத்தி முக்கோடி தேவர்கள் யார் என்று தெரியாது. அதை பற்றி பார்ப்போம்.

முப்பத்து முக்கோடி தேவர்கள் யார்? | Muppathi Mukodi Thevargal Thirumanam Sivan Parvati

வேதகால ஆரிய மக்களின் தேவர்களாக,

1. வருணன்

2. மித்திரா

3. ஆர்யமான்

4. பாகன்

5. யமன்

6. அம்சன்

7. துவஷ்டா

8. பூஷண்

9. சூரியதேவன்

9. சாவித்தர்

11. இந்திரன்

12. விஷ்ணு என்கிற பன்னிரு ஆதித்தியர்களும்

கர்ப்பிணி பெண்கள் பாட வேண்டிய பதிகம்

கர்ப்பிணி பெண்கள் பாட வேண்டிய பதிகம்


1. புவி

2. அக்னி

3. ஆகாயாம்

4. நீர்

5. காற்று

6. சூரியன்

7. நட்சத்திரங்கள்

8. சந்திரன் ஆகிய எட்டு இயற்கைப் பொருட்களை ஆள்பவர்கள் அஷ்ட வசுக்கள் எனும் எட்டு வசுக்களும்

1. ஆனந்தம் (பேரின்பம்)

2. விஞ்ஞானம் (பகுத்தறிவு)

3. மனம் (எண்ணங்கள்)

4. பிராணன் (மூச்சுக் காற்று அல்லது வாழ்க்கை)

5. வாக் (நா வன்மை)

6. ஈசானன், (உலகை ஆட்சி செய்பவர்)

7. தத்புருஷம், (பரம் பொருள்)

8. அகோரர் (கோபமற்றவர்)

9. வாமதேவம் (அமைதியானவர்)

10. சத்யோஜாதம் (நினைத்தவுடன் பிறப்பவர்)

11. ஆத்மன் எனப்படும் பதினொன்று ருத்திரர்களும் சேர்ந்து மொத்தம் 31 தேவர்களாகவும்

அவர்களுடன் இந்திரன் மற்றும் பிரஜாபதி ஆகியோரையும் சேர்த்து முப்பத்தி மூன்று தேவர்கள் இருப்பதாக ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முப்பத்தி மூன்று தேவர்களையேத் தற்போது, முப்பத்தி முக்கோடி தேவர்கள் என்று அழைக்கின்றனர்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US