பிரிந்து வாழும் தம்பதிகள் ஒன்று சேர முருகப்பெருமானை இந்த நாளில் வழிபாடு செய்யுங்கள்

By Sakthi Raj Jun 25, 2026 10:25 AM GMT
Report

கலியுக வரதனாக போற்றக்கூடிய முருகப்பெருமாள் பல தடைகளை தகர்த்து நமக்கு அருள் வழங்குபவராக இருக்கிறார். அப்படியாக, ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் திருமணம் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. இருப்பினும் திருமண வாழ்க்கை எல்லோருக்கும் இனிதாக அமைவது இல்லை.

நிறைய நபர்களுக்கு திருமணத்தில் பிரச்சனை, கணவன் குடும்பத்தினருடைய பேச்சுக்களை கேட்டு மனைவியை கொடுமை செய்தல், பிரிந்து வாழ்தல் போன்ற சூழ்நிலை உருவாகிறது, மேலும், ஜாதகத்தில் பெண்களுக்கு கணவனை குறிக்கும் கிரகம் செவ்வாய்.

அதோடு செவ்வாய் கிரகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடியவர் முருகப்பெருமான். ஆக, ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தாலும் அல்லது கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் ஏற்பட்டாலோ பெண்கள் சரணடைய வேண்டிய தெய்வம் முருகப்பெருமானாக இருக்கிறார்.

பிரிந்து வாழும் தம்பதிகள் ஒன்று சேர முருகப்பெருமானை இந்த நாளில் வழிபாடு செய்யுங்கள் | Murugan Mantras For Sevvai Dosham

2026: ருத்ர தாண்டவம் ஆடும் ராகு.. மிகவும் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

2026: ருத்ர தாண்டவம் ஆடும் ராகு.. மிகவும் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

அப்படியாக, அவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய் ஹோரையில் துவரம் பருப்பை பிரதானமாக கொண்ட உணவை தயார் செய்து அதை வீட்டில் உள்ள முருகப்பெருமானுக்கு நெய்வேத்தியமாக படைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்து "ஸ்ரீ வள்ளி தேவே சேன சமேத சுப்ரமணிய நமஹ" எனும் மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்கின்ற பொழுது அவர்கள் திருமண வாழ்க்கையில் உள்ள தடைகள் யாவும் விலகும்.

அதேபோல் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் என்று திருமணத்தல் காலதாமதம் சந்தித்துக் கொண்டிருப்பவர்களும் இந்த வழிபாடு மேற்கொள்வதால் அவர்களுக்கு விரைவில் முருகப்பெருமானுடைய அருளால் திருமணம் நடைபெறும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US