வீட்டில் முருகப்பெருமானின் வேல் வைத்து வழிபாடு செய்யலாமா?
முருகன் என்றாலே வரும் துன்பமும் வருகின்ற துன்பமும் ஓடி விடும்.அப்படியாக முருகன் ஆயுதமாக அவருடைய வேல் திகழ்கிறது.எதிரிகளை அழிக்கவும் பக்தர்களை ஆபத்தில் இருந்து காக்கவும் முருகப்பெருமானின் வேல் அருள் புரிகிறது.அப்படியாக இவ்வளவு சக்தி வாய்ந்த முருகப்பெருமானின் "வேல்"வைத்து வீட்டில் வழிபாடு செய்யலாமா?அவ்வாறு செய்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
பொதுவாக வீட்டில் முருகப்பெருமானுடைய வேல் வைத்து வழிபாடு செய்வது மிக சிறந்த பலன் கொடுக்கிறது.வீட்டில் நேர்மறை ஆற்றல் பெறுகிறது.குடும்பத்தில் உண்டான தடைகள்,தடங்கல் எல்லாம் விலகுகிறது.ஆனால் நாம் வேல் வைத்து வழிபாடு செய்யும் பொழுது அதை முறையாக வைத்து வழிபாடு செய்யவேண்டும்.
அதாவது புதிதாக வேல் வாங்கி பூஜை அறையில் வைக்கும் பொழுது அதற்கு அபிஷேகம் செய்யவேண்டும்.இது பிரம்ம முஹுர்த்தத்தில் செய்வது மிக சிறந்த பலனை கொடுக்கும்.அதற்கு அதிகாலை எழுந்து பெண்கள் குளித்து விட்டு மஞ்சள் நீர் கரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.பிறகு முதலில் மஞ்சள் நீர் கொண்டும் பிறகு பால் கொண்டும் அபிஷேகம் செய்து நிறைவாக நீர் கொண்டு அபிஷேகம் செய்யவேண்டும்.
அதன் பிறகு வேலிற்கு சந்தனம் குங்கமம் வைத்து பூ சூடி பிறகு நெய்வேத்தியமாக வாழைப்பழம் வைத்து கற்பூர தீபம் காண்பித்து பூஜையை நிறைவு செய்யவேண்டும்.முடிந்தவர்கள் அன்றைய தினம் பொங்கல் படைத்து வழிபாடு செய்யலாம்.முடியாதவர்கள் மாலை வேலையில் செய்யலாம்.ஆனால் புதிதாக வாங்கிய வேல் என்பதால் முதல் நாள் பூஜை செய்யும் பொழுது இதை எல்லாம் கடைபிடித்தால் அதீத சக்திகள் உருவாகும்.
முடிந்தவர்கள் தினமும் வேலிற்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்யலாம்.நேரம் இல்லாதவர்கள் கட்டாயம் செவ்வாய் வெள்ளிக்கிழமை நீர் கொண்டாவது அபிஷேகம் செய்து வழிபாடு செய்து வர உங்கள் வீட்டில் நடக்கும் அற்புத மாற்றங்களை காணமுடியும்.
அதோடு வேல் முன் அமர்ந்து வேல்மாறல்,கந்த சஷ்டி கவசம் போன்ற மந்திரங்கள் பாராயணம் செய்து வழிபட்டால் நிச்சயம் உங்கள் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் விரைவில் நடைபெறும்.அதோடு முருகன் அருளால் உங்கள் குடும்பத்தில் சந்தோசம் கூடிவரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |