தினமும் சொல்லவேண்டிய சக்தி வாய்ந்த முருகப்பெருமானின் 108 போற்றி மந்திரங்கள்

By Sakthi Raj Jul 25, 2025 10:12 AM GMT
Report

  தமிழ் கடவுள் முருகப்பெருமான் பக்தர்களின் துயர் தீர்ப்பவர். முருகப்பெருமானை வழிபாடு செய்தவர்களுக்கு நன்கு தெரியும் அவரின் அற்புத ஆற்றலும் அவரின் மகிமையும். அப்படியாக, முருகப்பெருமானின் மந்திரங்களுக்கு எப்பொழுதும் தனி சிறப்பும் சக்தியும் உண்டு.

அதாவது, நாம் மந்திரங்கள் சொல்லி பிரார்த்தனை செய்யும் பொழுது நம்முடைய வேண்டுதல்களுக்கு எப்பொழுதும் அதிக சக்திகள் இருப்பதை நாம் காணலாம்.

அந்த வகையில் வளமான வாழ்க்கை அமைய முருகப்பெருமானின் சக்தி வாய்ந்த 108 போற்றி மந்திரங்கள் பற்றி பார்ப்போம். இதை தினமும் பூஜை அறையில் அமர்ந்து முருகப்பெருமானை வழிபாடு செய்யும் பொழுது பாராயணம் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

தினமும் சொல்லவேண்டிய சக்தி வாய்ந்த முருகப்பெருமானின் 108 போற்றி மந்திரங்கள் | Murugaperuman 108 Potri Mantras In Tamil

1. ஓம் ஆறுமுகனே போற்றி

2. ஓம் ஆண்டியே போற்றி

3. ஓம் அரன்மகனே போற்றி

4. ஓம் அபிஷேகப்பிரியனே போற்றி

5. ஓம் அழகா போற்றி

6. ஓம் அபயா போற்றி

7. ஓம் ஆதிமூலமே போற்றி

8. ஓம் ஆவினன் குடியோய் போற்றி

9. ஓம் இறைவனே போற்றி

10. ஓம் இளையவனே போற்றி

11. ஓம் இடும்பனை வென்றவா போற்றி 1

2. ஓம் இடர் களைவோனே போற்றி

13. ஓம் ஈசன் மைந்தா போற்றி

14. ஓம் ஈராறு கண்ணனே போற்றி

15. ஓம் உமையவள் மகனே போற்றி

16. ஓம் உலக நாயகனே போற்றி

17. ஓம் ஐயனே போற்றி

18. ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி

19. ஓம் ஐயப்பன் தம்பியே போற்றி

20. ஓம் ஒப்பிலாதவனே போற்றி

21. ஓம் ஒங்காரனே போற்றி

22. ஓம் ஓதுவார்க்கினியவனே போற்றி

23. ஓம் அவ்வைக்கு அருளியவனே போற்றி

24. ஓம் கருணாகரரே போற்றி

25. ஓம் கதிர்வேலவனே போற்றி

26. ஓம் கந்தனே போற்றி

27. ஓம் கடம்பனே போற்றி

28. ஓம் கவசப்பிரியனே போற்றி

29. ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி

30. ஓம் கிரிராஜனே போற்றி

31. ஓம் கிருபாநிதியே போற்றி

32. ஓம் குகனே போற்றி

33. ஓம் குமரனே போற்றி

34. ஓம் குன்றம் அமர்ந்தவனே போற்றி

35. ஓம் குறத்தி நாதனே போற்றி

36. ஓம் குணக்கடலே போற்றி

37. ஓம் குருபரனே போற்றி

38. ஓம் சங்கரன் புதல்வனே போற்றி

39. ஓம் சஷ்டி நாயகனே போற்றி

40. ஓம் சரவணபவனே போற்றி

ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு 5 லட்சம் பணத்தால் அலங்காரம்- எங்கு தெரியுமா?

ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு 5 லட்சம் பணத்தால் அலங்காரம்- எங்கு தெரியுமா?

41. ஓம் சரணாகதியே போற்றி

42. ஓம் சத்ரு சங்காரனே போற்றி

43. ஓம் சர்வேஸ்வரனே போற்றி

44. ஓம் சிக்கல்பதியே போற்றி

45. ஓம் சிங்காரனே போற்றி

46. ஓம் சுப்பிரமணியனே போற்றி

47. ஓம் சரபூபதியே போற்றி

48. ஓம் சுந்தரனே போற்றி

49. ஓம் சுகுமாரனே போற்றி

50. ஓம் சுவாமிநாதனே போற்றி

51. ஓம் சுகம் தருபவனே போற்றி

52. ஓம் சூழ் ஒளியே போற்றி

53. ஓம் சூரசம்ஹாரனே போற்றி

54. ஓம் செல்வனே போற்றி

55. ஓம் செந்தூர் காவலனே போற்றி

56. ஓம் சேவல் கொடியோனே போற்றி

57. ஓம் சேவகனே போற்றி

58. ஓம் சேனாபதியே போற்றி

59. ஓம் சேனைத்தலைவனே போற்றி

60. ஓம் சொற்பதம் கடந்தவனே போற்றி

61. ஓம் சோலையப்பனே போற்றி

62. ஓம் ஞானியே போற்றி

63. ஓம் ஞாயிறே போற்றி

64. ஓம் ஞாலம் காப்பவனே போற்றி

65. ஓம் ஞான உபதேசியே போற்றி

66. ஓம் தணிகாசலனே போற்றி

67. ஓம் தயாபரனே போற்றி

68. ஓம் தண்டாயுதாபாணியே போற்றி

69. ஓம் தகப்பன் சுவாமியே போற்றி

70. ஓம் திருவே போற்றி

71. ஓம் திங்களே போற்றி

72. ஓம் திருவருளே போற்றி

73. ஓம் திருமலை நாதனே போற்றி

74. ஓம் தினைப்புனம் புகுந்தோய் போற்றி

75. ஓம் துணைவா போற்றி

76. ஓம் துரந்தரா போற்றி

77. ஓம் தென்பரங்குன்றனே போற்றி

78. ஓம் தெவிட்டா இன்பமே போற்றி

79. ஓம் தேவாதி தேவனே போற்றி

80. ஓம் தேவை அருள்வாய் போற்றி

81. ஓம் தேரேறி வருவோய் போற்றி

82. ஓம் தேசத் தெய்வமே போற்றி

83. ஓம் நாதனே போற்றி

84. ஓம் நிலமனே போற்றி

85. ஓம் நீறணிந்தவனே போற்றி

86. ஓம் பரபிரம்மமே போற்றி

87. ஓம் பழனியாண்டவனே போற்றி

88. ஓம் பாலகுமரனே போற்றி

89. ஓம் பன்னிரு கையனே போற்றி

90. ஓம் பகை ஒழிப்பவனே போற்றி

91. ஓம் பிரணவமே போற்றி

92. ஓம் போகர் நாதனே போற்றி

93. ஓம் போற்றப்படுவோனே போற்றி

94. ஓம் மறைநாயகனே போற்றி

95. ஓம் மயில் வாகனனே போற்றி

96. ஓம் மகா சேனனே போற்றி

97. ஓம் மருத மலையானே போற்றி

98. ஓம் மால் மருகனே போற்றி

99. ஓம் மாவித்தையே போற்றி

100. ஓம் முருகனே போற்றி

101. ஓம் யோக சித்தியே போற்றி

102. ஓம் வயலூரானே போற்றி

103. ஓம் வள்ளி நாயகனே போற்றி

104. ஓம் விராலிமலையானே போற்றி

105. ஓம் விநாயகன் சோதரனே போற்றி

106. ஓம் வினைகளைக் களைவாய் போற்றி

107. வேலவனே போற்றி

108. ஓம் வேத முதல்வனே போற்றி போற்றி

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US