வீட்டில் வேல் வைத்து பூஜை செய்பவரா நீங்கள்? இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்
இந்த கலியுகத்தில் மக்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருள் புரிபவர் முருகப்பெருமான். மேலும், முருகப்பெருமான் என்றாலே நமக்கு அவரின் மயிலும் வேலும் தான் நினைவிற்கு வரும். முருகப்பெருமானின் வேல் தீய சக்திகளை அழித்து பக்தர்களுக்கு பாதுகாப்பை அளிக்கும் ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாகும்.
அப்படியாக, இவ்வளவு சக்தி வாய்ந்த முருகப்பெருமானின் வேல் வைத்து பலரும் வீடுகளில் வழிபாடு செய்வதுண்டு. அதாவது, வேலும் மயிலும் துணை என சொல்லுவதால் முருகப் பெருமானின் கையில் இருக்கும் வேல் நம்முடன் இருந்தால் நம்மை எந்த தீமையும் நெருங்காது.
அதோடு எப்பொழுதும் அந்த கலியுக வரதன் நம்முடன் இருந்து வழிநடத்துவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். அப்படியாக, வீடுகளில் வேல் வைத்து வழிபாடு செய்பவர்கள் பலரும் வேலை மட்டும் தனியாக வைத்து, அதற்கு அபிஷேகம், அலங்காரம் செய்து, வழிபடுகிறார்கள்.
இது முற்றிலும் தவறான ஒரு விஷயம் ஆகும். முருகப்பெருமானும் வேலும் வெவ்வேறு அல்ல. வேல் இல்லாமல் முருகன் இல்லை, முருகப்பெருமான் இல்லாமல் வேல் இல்லை. ஆதலால் முருகப்பெருமானுடன் சேர்த்து தான் நாம் வேல் வைத்து வழிபாடு செய்யவேண்டும்.
அதே போல் வேலை சாதாரணமாக சுவாமி படங்களின் மீது சாய்த்து வைக்கக் கூடாது. முதல் விக்ரஹத்துடன் சேர்த்தோ அல்லது ஒரு பீடத்தின் மீதோ அல்லது ஒரு சிறிய கிண்ணத்தில் அரிசி அல்லது விபூதியை வைத்து அதற்கு மத்தியிலேயே நிறுத்தி வைக்க வேண்டும்.
அதோடு, வேல் வைத்து வழிபாடு செய்பவர்கள் தினமும் அல்லது செவ்வாய், சஷ்டி, கிருத்திகை, விசாகம் நாட்களில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்த பிறகு சுத்தமான விபூதியால் அபிஷேகம் செய்து விட்டு, சுத்தமான துணியால் துடைத்து, சந்தனம், குங்குமம் வைத்து, தீப தூப ஆராதனைகள் காட்ட வேண்டும். இவ்வாறு மனதார செய்து வர உங்களால் நிச்சயம் முருகப்பெருமானை மனதார உணர முடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |