விளக்கு ஏற்றும் போது கட்டாயம் சொல்ல வேண்டிய முருகர் மந்திரம்
கடவுள் ஒளி வடிவில் பார்க்கப்படுகிறார்.அப்படியாக அந்த ஒளியானதை நாம் வீடுகளில் விளக்கு வடிவில் ஏற்றி வழிபட்டு வருகின்றோம்.இந்துக்கள் வீடுகளில் தினமும் கட்டயமாக காலை மாலை விளக்கு ஏற்றி வழிபாடு செய்வோம்.வீட்டில் விளக்கு ஏற்றுவது என்பது நம்முடைய வீட்டிற்கு ஏற்படும் துன்பங்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
அப்படியாக மனதார இறைவனை மட்டும் நினைத்து விளக்கு ஏற்றுவதை காட்டிலும் இறைவனின் மந்திரங்கள் சொல்லி விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய கூடுதல் பலன்கள் கிடைக்கிறது. எப்பொழுதுமே இறைவனின் மந்திரங்களுக்கு தனி சக்தி உண்டு.அவற்றிக்கு எப்பேர்ப்பட்ட தோஷங்களையும் கரைக்க கூடிய தன்மை உண்டு.
அந்த வகையில் கலியுக வரதனாக பல மக்களின் மனதில் குடி கொண்டு இருக்கும் முருகப்பெருமான் மக்கள் குறையை தீர்த்து அருள்புரிகின்றார். அப்படியாக விளக்கு ஏற்றும் பொழுது நாம் சொல்ல வேண்டிய முருகர் மந்திரம்
"தீப மங்கள ஜோதீ நமோ நம!
தூய அம்பல லீலா நமோ நம!
ஞான பண்டித ஸாமீ நமோநம!
அருள்தாராய்."
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் இருந்து எடுக்கப்பட்ட ஜோதி மந்திரம் தான் இது.விளக்கு ஏற்றும் பொழுது நாம் மனதார நம்முடைய துன்பம் நீங்க முருகப்பெருமானை வேண்டி இந்த மந்திரம் சொல்ல வீட்டில் ஏற்பட்ட கஷ்டம் படி படியாக குறையும்.
சிலர் வீடுகளில் வெள்ளி செவ்வாய் கிழமை மட்டும் விளக்கு ஏற்றுவார்கள்.ஆனால் தினமும் விளக்கு ஏற்ற வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் உள்ளே வருவதை இந்த தீபம் தடுத்து விடும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |