இஸ்லாமியர் கட்டிய ராமர் கோயில்.. அயோத்திக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு செல்லலாமாம்.
பக்தி என்பது அளவிட முடியாததாக இருக்கிறது. சமயங்களில் பக்தி எல்லா நிலைகளையும் கடந்த உருவாகிறது. அப்படியாக ஆந்திர மாநிலம் சத்திய சாய் மாவட்டம் தனக்கல்லு அடுத்த பெத்த பள்ளியை சேர்ந்தவர் முத்தியார் பாஷா. இவர் தன்னுடைய கிராமத்தின் அருகே சுமார் 14 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டி இருக்கிறார்.
இவர் மும்பையைச் சேர்ந்த பிரபல கட்டிட கலைஞர்களை கொண்டு அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலை போல் இந்த கோவிலை இவர் வடிவமைத்திருக்கிறார். இந்த கோவிலில் ராமர் , லட்சுமணர், சீதா ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருக்கிறது. ராம நவமியை முன்னிட்டு 9 நாட்கள் தினமும் பூஜைகள் நடைபெற்றது.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கோவிலை குறித்து முத்தியார் பாஷா கூறுவது, இவர் சிறு வயதில் இருந்து கிராமத்தில் உள்ள கோவில்களில் நடக்கக்கூடிய பூஜை நிகழ்சிகளை பார்த்து வளர்ந்திருப்பதாகவும் அந்த நிகழ்வுதான் இவருக்குள் பக்தியை ஏற்படுத்தியதாகவும் அவர் சொல்கிறார்.
மேலும், அயோத்திக்கு சென்று ராமரை வழிபாடு செய்ய முடியாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு செல்லலாம் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
அதோடு இந்த கோவிலுக்கு பக்தர்கள் எளிதாக வந்து செல்வதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |