கோயில் கும்பாபிஷேகத்திற்கு சீர்வரிசை எடுத்துவந்த இஸ்லாமியர்கள்
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை கிராமத்தில் பழமை வாய்ந்த காளியம்மன் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து கடந்த சில நாட்களாக புனரமைப்பு பணிகள் நடந்துவந்த நிலையில் பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேக நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள இசை உடன் மகா கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு யாகங்கள் மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டு காளியம்மன் கோயில் விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனிடையே அப்பகுதியைச் சேர்ந்த சகாபாய் என்ற இஸ்லாமியர் தலைமையில் இஸ்லாமிய மக்கள் ஒன்று கூடி காளியம்மனுக்கு சீர் வரிசைப் பொருட்களை எடுத்து வந்தனர்.
பின்னர் கோயில் நிர்வாகிகளிடம் அந்த சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்திய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |