பள்ளிவாசலில் இருந்து கும்பாபிஷேகத்திற்கு சீர்வரிசை - மத ஒற்றுமையை காட்டிய இஸ்லாமியர்கள்
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்துள்ள படியூர் அடுத்த ஓட்டப்பாளையம் ரோஸ் கார்டன் பகுதியில் பிள்ளையார் கோயில் கட்டுவதற்கு இஸ்லாமியர்கள் நிலம் வழங்கியுள்ளனர்.
மத ஒற்றுமையை காட்டிய இஸ்லாமியர்கள்
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்துள்ள படியூர் அடுத்த ஓட்டப்பாளையம் ரோஸ் கார்டன் அருகே இன மத பேதமன்றி பல இனத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த இடத்தில் விநாயகர் கோயில் கட்டப்பட வேண்டும் என முன்னரே தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதற்கு தேவையானளவு இடம் இல்லாமையால் கட்டுமானப் பணிகள் தடைப்பட்டன.
எனவே அதற்கு உதவும் விதமாக அப்பகுதியில் உள்ள ஆர்எம்ஜே ரோஸ் கார்டன் முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலுக்கு சொந்தமான 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 சென்ட் நிலத்தை கோவிக்கு தானமாக இஸ்லாமியர்கள் வழங்கியுள்ளனர்.
இதையடுத்து அப்பகுதியில் கோயில் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது கோயிலின் கும்பாபிஷேகம் நேற்று சிறப்பமாக நடந்து முடிந்துள்ளது.
இதன்போது பள்ளிவாசலில் இருந்து கோயிலுக்கு தேவையான பொருட்கள் சீர்வரிசையாக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இஸ்லாமியர்கள் சார்பில் நிகழ்த்தப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவமானது சமூகத்தில் ஓற்றுமையை ஏற்படுத்தியுள்ளதாக பலர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |