வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதியும், சுவாதி நட்சத்திரமும், பிரதோஷ காலமும் சேரக்கூடிய சேரக்கூடிய நேரத்தில்தான் நரசிம்ம ஜெயந்தி கொண்டாடப்படும்.
இதன் அடிப்படையில் இந்த வருட நரசிம்ம ஜெயந்தி 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று கொண்டாடப்பட வேண்டுமா? அல்லது 22 ஆம் தேதி புதன்கிழமை அன்று கொண்டாடப்பட வேண்டுமா? என்ற குழப்பம் நரசிம்மர் பக்தர்களுக்கு இருக்கிறது.
அதை தெளிவுப்படுத்தும் வகையில் நரசிம்மர் ஜெயந்தி என்று கொண்டாட வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
நரசிம்மர் ஜெயந்தி வருகின்ற 21.5.2024 செவ்வாய்க்கிழமை மாலை 5:39 மணி முதல் 22.5.2024 புதன்கிழமை மாலை 6:48 மணி வரை சதுர்த்தசி திதி இருக்கிறது.
21.5.2024 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 5:47 மணி முதல் 22.5.2024 புதன்கிழமை காலை 7:46 மணி வரை தான் துவாதசி திதி இருக்கிறது.
இந்த நேரத்தின் அடிப்படையில் பார்த்தால் 21.5.2024 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில்தான் சதுர்த்தசி திதி, சுவாதி நட்சத்திரம், பிரதோஷ காலம் இந்த மூன்றுமே சேர்ந்து வருகிறது.
இதனால் செவ்வாய்க்கிழமை மாலை நரசிம்மர் வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பு. பஞ்சாங்கத்திலும் இதுதான் கொடுக்கப்பட்டுள்ளது.
சில கோவில்களில் புதன்கிழமை காலை நரசிம்மருக்கு விசேஷ பூஜைகளும் அபிஷேகங்களும் நடக்கவிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வீட்டில் இருந்து பூஜை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், செவ்வாய்க்கிழமை மாலை 5:30 மணியிலிருந்து 6:30 மணிக்குள் இந்த பூஜையை செய்து நிறைவு செய்து கொள்ளலாம்.
நாளை மாலை பூஜையாறையில் இருக்கும் பெருமாள் படத்திற்கு அலங்காரம் செய்து கொள்ளுங்கள். துளசி இலைகளால் அலங்காரம் செய்வது சிறப்பு.
பெரும்பாலும் லட்சுமி நரசிம்மரை வீட்டில் வைத்து வழிபாடலாம் தவறு கிடையாது.நிறைய பேர் வீட்டில் லட்சுமி நரசிம்மது திருவுருவ படம் இருக்காது. அதனால் பெருநாளுக்கே வழிபாடு செய்யலாம்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |
.