நாரதர் கழகம் நன்மையில் முடியுமா?
நாரதர் என்றாலே நாம் எல்லோருக்கும் நினைவிற்கு வருவது அவர் இருக்கும் இடத்திலே கண்டிப்பாக கழகம் உண்டாகிவிடும் என்பது.
ஆதலால் அவரை நினைத்தல் பயம் உண்டாகும் அப்படி இருக்க நாரதர் யார்?அவர் இருக்கும் இடத்தில் ஏன் கழகம் உண்டாகிறது என்று பார்ப்போம்.
பொதுவாக நாரதர் கலகத்தை தொடங்கி வைத்து, அதன் மூலம் உலக உயிர்களுக்கு ஒரு தத்துவத்தை தெளிவுபடுத்துவது இவரது பிரதான வேலைகளில் ஒன்று.
இதனால் ‘நாரதர் கலகம் நன்மையில் முடியும்’ என்ற முதுமொழி உருவானது. அதாவது நாரதர் மும்மூர்த்திகளில் ஒருவரும், படைப்புத் தொழிலைச் செய்பவருமான பிரம்மதேவனின் மகன்தான் நாரத முனிவர்.
இவர் ஒருவர் தீவிரமான விஷ்ணு பக்தர்.வீணையை மீட்டுவதில் வல்லவர்.மேலும் நாரதர் என்றாலே நமக்கு முதலில் "நாராயண"நாராயண "என்று அவர் சொல்லுவது தான் நினைவிற்கு வரும்.
அப்படியாக ‘நாராயணா’ என்ற வார்த்தையின் மூலமாக தன்னுடைய இறைபக்தியை எப்பொழுதும் வெளிப்படுத்துபவர்.
முற்பிறவியில் கந்தர்வனாக இருந்த நாரத முனிவர், சாபத்தின் காரணமாக ஒரு முனிவரின் வீட்டில் பிறந்தார். அங்கு விஷ்ணு புராணத்தைப் படித்து, தவம் இருந்து பரம்பொருளான விஷ்ணுவின் தரிசனத்தைப் பெற்றார்.
மேலும் விஷ்ணுவின் ஆசியோடு, நினைக்கும் தருணத்தில் எல்லாம் அவரைக் காணும் வரத்தையும் பெற்றார். கந்தர்வ குலத்தில் பிறந்த ரிஷியாக மாறியதால், இவரை ‘தேவரிஷி’ என்று அழைப்பார்கள்.
முக்காலங்களையும் உணர்ந்தவராக புராணங்கள் இவரை சித்தரிக்கின்றன. நினைத்த மாத்திரத்தில் மூன்று உலகங்களையும் சுற்றிவரும் சக்தி படைத்தவர் என்பதால், நாரதரை ‘திரிலோக சஞ்சாரி’ என்றும் கூறுவார்கள்.
கலகத்தை தொடங்கி வைத்து, அதன் மூலம் உலக உயிர்களுக்கு ஒரு தத்துவத்தை தெளிவுபடுத்துவது இவரது பிரதான வேலைகளில் ஒன்று.
இதனால் ‘நாரதர் கலகம் நன்மையில் முடியும்’ என்ற முதுமொழி உருவானது. ஆகம விதிகளைப் பற்றி நாரத முனிவர் எழுதிய நூல் ‘பஞ்சரத்ரா.’
இந்த நூல் வைணவ தெய்வங்களுக்கு பூஜை செய்யும் முறைகளை விளக்கும் வகையில் அமைந்ததாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |