கிருஷ்ண பகவானின் அறிவுரை: ஒருவர் கண்ணீரை சாதாரணமாக எண்ண கூடாதாம்
இந்த உலகத்தில் பிறந்த எல்லா உயிர்களுக்கும் இன்ப துன்பம் என்ற இரண்டும் கலந்த வாழ்க்கையே அமைகிறது. அந்த வகையில், கிருஷ்ண பகவான் நம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய விஷயங்களுக்கு ஏற்ப சில முக்கியமான அறிவுரை சொல்கிறார். அதைப்பற்றி பார்ப்போம்.
அதாவது, பலருக்கும் அறியாமையால் அகங்காரத்தால் சுயநலத்தால் ஒருவருக்கு அளவு கடந்த வலியை கொடுத்து விடுகிறார்கள். அந்த வகையில், பிறருக்கு நாம் கொடுக்கக்கூடிய வலி ஒரு நாள் நம்மை தேடி வந்த சேரும்.

அப்பொழுது அதனை நாம் விதி என்று சொல்லக்கூடாது என்று சொல்கிறார். அது அந்த நேரங்களில் அந்த நபர் விதைத்த விதையின் அறுவடையாகவே கருதப்படுகிறது. மேலும், ஒருவருடைய கண்ணீரை நாம் எப்போதும் சாதாரணமாக எண்ணக்கூடாது.
ஒரு நாள் அதே கண்ணீர் நம்முடைய கண்களிலும் வரக்கூடும். இந்த உலகத்தில் நன்மைக்கு நன்மையும், தீமைக்கு தீமையும் சரியான நேரத்தில் செய்தவருக்கு வந்து சேரும் என்பது எந்த மாற்றமும் இல்லை என்கிறார்.
அதோடு முக்கியமாக கர்மாவின் கணக்கு தாமதமாக வரலாம். ஆனால், அவை ஒருபோதும் வருவதற்கு தவறுவதில்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |