நீங்கள் துலாம் ராசியில் பிறந்தவர்களா? உங்களுடைய தனித்துவமான தன்மை என்ன தெரியுமா?
ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும். அந்த வகையில், சுக்கிரனின் ஆதிக்கத்தை கொண்ட துலாம் ராசி அவருடைய தனித்துவமான தன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
துலாம் ராசிக்கு சுக்கிரன் ஆட்சிக்கு மேம்பட்ட நிலையான மூலத்திரிகோண எனும் வலுவினை அடையும் ராசி ஆகும்.
துலாம் ராசியில் பிறந்தவர்கள் வெளிப்படை தன்மை உடையவர்களாக இருப்பார்கள். துலாம் ராசி அதிபதி சுக்கிரன் என்பதால் இவர்களுக்கு எப்பொழுதும் அழகின் மீது அதிக அக்கறையும் கவனமும் செலுத்துபவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் ஒருவரை மிகுந்த அக்கறையோடு கவனித்துக் கொள்வார்கள். சமநிலை உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
துலாம் ராசி ஒரு காதல் ராசி என்பதால் ஒருவர் மீது அதிக அளவில் அன்பும் காதலும் கொள்வார்கள். ஒருவரிடத்தில் எளிதில் பழகக் கூடியவர்கள். ஆனால் மற்றவர்களிடத்தில் போலி தன்மையை கண்டால் உடனடியாக விலகி விடுவார்கள்.
துலாம் ராசி ஆண் ராசி என்பதால் இவர்களிடத்தில் அதிக அளவில் துணிச்சல் இருக்கும். தைரியமாக முடிவெடுப்பார்கள். நேர்மை குணம் அதிக அளவில் இருக்கும். நேர்மையாக நடந்து கொண்டாலே இவர்களுக்கு பிடித்தவராக மாற முடியும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |