வீடுகளில் மகாலட்சுமி படத்தை தவறியும் இந்த திசையில் வைத்து விடாதீர்கள்
ஒவ்வொரு மனிதருக்கும் மகாலட்சுமியின் பரிபூரண அருள் கட்டாயமாக தேவை. அந்த வகையில், வீடுகளில் மகாலட்சுமி திருவுருவப்படத்தை வைத்து வழிபாடு செய்வது நமக்கு நற்பலனை பெற்றுக்கொடுக்கும்.
இருப்பினும் மகாலட்சுமி படங்களை வைத்து வழிபாடு செய்வதற்கு என்று உரிய திசைகள் இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம். ஆன்மீக சாஸ்திரப்படி மகாலட்சுமி படத்தை வடக்கு, கிழக்கு அல்லது வட கிழக்கு திசையில் வைப்பது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

தாமரை மலரில் அமர்ந்திருக்க கூடிய மகாலட்சுமியின் படத்தை வீடுகளில் வைத்து வழிபாடு செய்வது என்பது மிகவும் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. தாமரை என்பது தூய்மை மற்றும் செழிப்பின் அடையாளமாக இருப்பதால் அதனை கட்டாயமாக வீடுகளில் வைத்து வழிபாடு செய்யலாம்.
அதுபோல், தங்க நாணயங்கள் பொழியக்கூடிய லட்சுமி படத்தையும் வீடுகளில் வைத்து வழிபாடு செய்யலாம்.
மேலும், வாஸ்து சாஸ்திரங்களின்படி மகாலட்சுமியின் படத்தை தெற்கு திசையில் வைத்து வழிபாடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
எனவே முடிந்தவரை வடக்கு அல்லது கிழக்கு திசையை தேர்ந்தெடுக்கலாம். அதோடு, மகாலட்சுமியின் படத்தை குளியலறை, கழிவறை, போன்ற பகுதிகளுக்கு அருகில் வைக்கக்கூடாது. அதேபோல், படிக்கட்டுகளுக்கு கீழே வைப்பதையும் தவிர்க்க வேண்டும்.

எப்பொழுதும் தரையில் நேரடியாக மகாலட்சுமி படத்தை வைக்காமல் சுத்தமான மேஜையில் வைப்பது அவசியம். மகாலட்சுமியின் படத்தை எப்போதும் சுத்தமாகவும் பூக்கள் சமர்ப்பித்து வழிபாடு செய்வது முக்கியம்.
மேலும், வாஸ்து ரீதியாக நாம் மகாலட்சுமியின் படங்களை மாட்டி வைப்பது என்பது நமக்கு ஒரு நல்ல அதிர்வலைகளை கொடுத்தாலும் நாம் சொந்த முயற்சி என்பது மிகவும் முக்கியம். நம்முடைய உழைப்பிற்கு அடுத்தபடியாக நாம் தாய் தந்தையரை மதிப்பதும் குருமார்களை போற்றுவதும் பிறகு இறைவனை சரண் அடைவது மட்டுமே நமக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்றுக் கொடுக்கும் என்பதை நாம் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |